பத்திரிகை சுதந்திரம் முக்கியமானது என்றும் அது குறைந்தால் எஸ்பிஎச் மீடியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் திரு கோ பூன் வான் தெரிவித்தார்.
நம்பகரமான செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதே எஸ்பிஎச் மீடியாவை மறுசீரமைக்கப்
படுவதற்கான முக்கிய நோக்கம் என்றார் அவர்.
"அரசாங்கம் அல்லது ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் நாளிதழை வாசகர்கள் ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.
"அதிலும் மின்னிலக்கச் செய்தித்தளம் என்றால் அது இன்னும் விரைவாக வாசகர்களின் கவனத்துக்குச் சென்றுவிடும். மிக விரைவாக நாளிதழின் கதையும் முடிந்துவிடும்," என்றார் திரு கோ.

