எஸ்பிஎச் மீடியாவின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக செய்தித் துறையில் பல்லாண்டு அனுபவம் கொண்டவரும் எஸ்பிஎச்சின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்தவருமான திரு பேட்ரிக் டேனியல் நியமிக்கப்படவுள்ளார்.
66 வயது திரு டேனியல் 2017ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அவர் 30 ஆண்டுகளாக எஸ்பிஎச்சில் பணியாற்றி படிப்படியாக உயர்ந்தவர்.
திரு டேனியலின் தலைமையின்கீழ் எஸ்பிஎச்சின் ஊடகப் பிரிவில் ஏற்படும் மாற்றம் சுமுகமாக நடைபெறும் என்று திரு கோ பூன் வான் தெரிவித்தார். எஸ்பிஎச் மீடியா வெற்றி பெற தனிப்பட்ட முறையில் திரு டேனியலுக்கு விருப்பம் இருப்பதாக திரு கோ கூறினார்.

