புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

1 mins read
679127df-e207-4ba6-ba32-5a1dd3100f3a
-

சிங்­கப்­பூ­ரில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 16 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களில் 10 பேருக்கு சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது.

இந்­தப் பத்து பேரில் ஏழு பேர் சாங்கி விமான நிலை­யத்­தின் கொவிட்-19 குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். இக்­கு­ழு­மத்­தில் இது­வரை மொத்­தம் 25 பேர் உள்­ள­னர்.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்ட இரு­வர் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­

க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

சமூக அள­வில் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில்­லா­த­வர்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 61,419ஆக அதி­க­ரித்­துள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 11 குழு­மங்­கள் உள்­ளன.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் என்று நேற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் ஆறு பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள். சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது அல்­லது தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்குவி­டு­தி­களில் புதி­தாக கொரோனா பாதிப்பு இல்லை.