துரித ரயில் திட்-டத்திற்கு $321.7 மில்-லி-ய-ன் மதிப்புள்ள ஒன்பது ஒப்-பந்-தக் குத்-த-கை-கள்

துரித ரயில் திட்-டத்திற்கு $321.7 மில்-லி-ய-ன் மதிப்புள்ள ஒன்பது ஒப்-பந்-தக் குத்-த-கை-கள்

2 mins read
c56b51f0-6810-41c9-93a3-9d159c6be1a0
-

சிங்­கப்­பூர்-ஜோகூர் துரித ரயில் திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­தற்­கான பணி­க­ளுக்கு $321.7 மில்­லி­யன் பெம­று­மா­ன­முள்ள ஒன்­பது ஒப்­பந்­தக் குத்­த­கை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதை ேநற்று தெரி­வித்த துரித ரயில் நடத்­து­னர் ஆர்­டி­எஸ் ஆப்­ர­ஷேன்ஸ் (ஆர்­டி­எஸ்ஓ) என்ற நிறு­வனம் திட்­டப் பணி­கள் நல்ல முறையில் முன்­னேற்றம் கண்டு வரு­வ­தா­கக் கூறி­யது.

ஒப்­பந்­தக் குத்­த­கை­கள் எப்­பொ­ழுது வழங்­கப்­பட்­டன என்­பதை ஆர்­டி­எஸ் ஆப்­ப­ரே­ஷன்ஸ் நிறு­வனம் தெரி­விக்­க­வில்லை.

இந்த ரயில் திட்­டம் சிங்­கப்­பூ­ரின் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம், மலே­சிய போக்­கு­வ­ரத்து நிறு­வ­னம் பாச­ரானா ஆகி­ய­வற்­றுக்­கி­டை­யி­லான கூட்டு முயற்­சி­யா­கும்.

ேமற்­கூ­றிய ஒன்­பது ஒப்­ப­தந்­தக் குத்­த­கை­களில் நான்கு மைய செயல்­மு­றைத் திட்­டங்­க­ளுக்­கா­னது.

இதில் 'சிசி­ஆர்சி' என்ற சீன நிறு­வ­னம் ரயில் திட்­டத்­தின் அவ்வப்­பொ­ழுது தேவைப்­படும் பொருட்­க­ளுக்கு பொறுப்­பேற்­றுக் கொள்­ளும்.

இந்­தத் திட்­டத்­தின் சமிக்ஞை முறை, தள­மேடை தடுப்­புக் கத­வு­கள் ஆகி­ய­வற்­றுக்கு சீமன்ஸ் மொபி­லிட்டி என்ற நிறு­வ­னம் பொறுப்­பேற்­றுக் கொள்­ளும்.

இதே­போல், மற்­றொரு மலே­சிய நிறு­வ­ன­மான சப்­புரா ரயில் சிஸ்­டம்ஸ் ரயில் திட்­டத்­தின் தொடர்­புக் கட்­ட­மைப்பு, ஒருங்­கிை­ணந்த கண்­கா­ணிப்பு கட்­டுப்­பாடு முைறயை கையா­ளும்.

துரித ரயில் திட்­டத்­தின் மற்ற ஐந்து ஒப்­பந்­தக் குத்­த­கை­கள் ரயில் தடம், மின்­சார விநி­யோக முறை, பணி­ம­னைக் கரு­வி­கள், திட்ட சேவைக்கு பயன்­படும் வாக­னங்­கள், தானி­யக்க கட்­டண வசூ­லிப்பு முறை தொடர்­பா­னவை.

"ஒப்­பந்­தக் குத்­த­கை­கள் வழங்­கப்­பட்­ட­தில் நாங்­கள் மகிழ்ச்­சி­ய­டை­கி­றோம். துரித ரயில் திட்­டம் வெற்­றி­ய­டை­யும் வகை­யில் இதில் உள்­ளூர், அனைத்­து­லக நிறு­வ­னங்­கள் இணைந்து பணி­யாற்­று­கின்­றன," என்று ஆர்­டி­எஸ்ஓ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஷம்­சுல் ரிசால் கருத்­து­ரைத்­தார்.

சிங்­கப்­பூர் நிறு­வ­ன­மான ஆர்டி­எஸ்ஓ இந்த நான்கு கிலோ­மீட்­டர் ரயில் தடம், இதன் தொடர்­பில் ஜோகூர் பாரு­வில் அமைந்­தி­ருக்­கும் வாடி ஹானா என்ற பணிமனை­யை­யும் பரா­ம­ரிக்­கும்.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் உட்­லண்ட்ஸ் நார்த் ரயில் நிலை­யத்­தின் நில அகழ்வு திட்­டம் இடம்­பெற்­றதை அடுத்து இந்­தக் கூடு­தல் விவ­ரங்­கள் தற்­பொ­ழுது வெளி­யா­கி­யுள்­ளன.

அதைத் தொடர்ந்து நிலத்­த­டிக்கு 25 மீட்­டர் உய­ரத்­தில் அமைக்­கப்­ப­ட­வுள்ள மேம்­பால இணைப்­புக்கு சிங்­கப்­பூ­ரின் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் $180 மில்­லி­யன் பெறுமா­ன­முள்ள ஒப்­பந்­தக் குத்­த­கையை வழங்­கி­யது.