சாங்கி விமான நிலையங்கள், ஜுவல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகின்றன

சாங்கி விமான நிலையங்கள், ஜுவல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகின்றன

1 mins read
8bf0cc93-85b3-4f33-9555-2d8a10ae85cb
விமான நிலைய முனையம் 1, சாங்கி ஜுவல் கிருமித்தொற்று சம்பவங்கள் காரணமாக மூடப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலை­யத்­தின் எல்லா பய­ணி­கள் முனை­யங்­களும் அதனை ஒட்­டிய ஜுவல் கடைத்­தொ­கு­தி­யும் இன்று முதல் இரண்டு வாரங்­க­ளுக்­குப் பொது­மக்­க­ளுக்கு மூடப்­படும்.

பய­ணி­கள் முனை­யங்­க­ளுக்குள் ஊழி­யர்­கள் சில­ரும் பய­ணி­களும் செல்ல அனு­மதி உண்டு. ஆனால் ஜுவல் கடைத்­தொ­குதி முழு­மை­யாக மூடப்­பட்­டுள்­ளது.

ஊழி­யர்­க­ளுக்­கான கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னை­கள் விமான நிலை­யத்­தில் நடை­பெ­றும் வேளை­யில் இந்­ந­ட­வடிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் விமா­னப்­போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் சாங்கி விமான நிலை­யக் குழு­ம­மும் இதனை நேற்று தெரி­வித்­தன.

கொவிட்19 சூழல் தொடர்ந்து மாறி வரு­வ­தால் தேவைப்­பட்­டால் அதற்கு ஏற்ப அதி­கா­ரி­கள் நட­வ­டிக்­கை­களை பரி ­சீலித்து மாற்­றி­ய­மைப்­பர். முனை­யங்­க­ளை­யும் ஜுவல் கடைத்­தொ­கு­தி­யை­யும் கூடு­தல் காலத்­துக்கு மூடு­வ­தும் அதில் அடங்­கும். சாங்கி விமான நிலையம் இக்காலக்கட்டத்தில் விமானப் பயணங்களுக்குத் திறந்திருக்கும் என்றும் பயணிகளை விமான நிலையத்தில் இறக்கி விடவும் அவர்களை அங்கிருந்து கூட்டிச் செல்லவும் முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலைய தொடர்பான கிருமித் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.