தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2 வாரத்தில் $3.2 மி. நன்கொடை

3 mins read
58be813b-77c9-4c4f-bd58-8a5754832cf1
-

இந்து இளங்­கோ­வன்

கொவிட்-19 கிரு­மித்­தொற்றுக்கு எதிரான போராட்­டத்­தில் இந்­தி­யா­வுக்கு உத­வ சிங்­கப்­பூர் செஞ்­சிலு­வைச் சங்­கம் கடந்த இரண்டு வாரங்­களில் 3.2 மில்­லி­யன் வெள்ளி நன்­கொ­டை­யைத் திரட்­டி­யுள்­ளது.

சமூக அமைப்­பு­களும் பொது மக்­களும் வழங்­கிய இத்­தொகை, அவ­சர­மா­கத் தேவைப்­படும் மருத்­து­வச் சாத­னங்­கள், உயிர்­வாயுக் கலன்­கள் உள்­ளிட்­ட­வற்றை வாங்­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஆந்­திர பிர­தே­சம், புதுெட­ல்லி, கர்­நா­ட­கம், கேரளா, மகா­ராஷ்­டிரா, தெலுங்­கானா, தமிழ் நாடு ஆகிய ஏழு மாநி­லங்­களில் உள்ள மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் மருத்­துவ முகாம்­க­ளுக்­கும் இவை விநி­யோ­கிக்­கப்­படும்.

முதல் கட்­ட­மாக, சிங்­கப்­பூர் செஞ்­சிலு­வைச் சங்­கம் ஏற்­கெ­னவே 1,300 உயிர்­வாயு கலன்­கள், உறை­நி­லை­யில் உயிர்­வா­யுவை வைத்­தி­ருப்­ப­தற்­கான மூன்று ராட்­சத கொள்­க­லன்­கள், ஐந்து சுவா­சக் கரு­வி­கள் ஆகி­ய­வற்றை இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­யுள்­ளது.

வரும் வாரங்­களில், 4 மில்­லி­யன் அறுவை சிகிச்சை முகக் ­க­வ­சங்­கள், 1.5 மில்­லி­யன் N95 முகக்­ க­வ­சங்­கள், 2000 உயிர்­வாயு உற்­பத்­திக் கரு­வி­கள், 1200 உயிர்­ வாயுக் கலன்­கள், 150 சுவா­சக் கரு­வி­கள் ஆகியவை கப்­ப­லில் அனுப்­பப்­படும்.

இந்­தி­யத் தொழிற்­சா­லை­களில் உயிர்­வாயு உற்­பத்­தி­செய்­யப்­பட்­டா­லும் அவற்­றுக்­கான கொள்­க­லன்­கள் போத­வில்லை. அத­னால் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து அக்­க­லன்­களை இந்­தி­யா­விற்கு கொண்­டு­செல்ல ஏற்­பா­டு­கள் நடந்­து­வ­ரு­வ­தா­கக் கூறி­னார் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் பொதுச் செய­லா­ளர் திரு பெஞ்­ச­மின் ஜெய­ராஜ் வில்­லி­யம்.

"உயிர்­வாயு கரு­வி­கள், கலன்­கள் போன்­ற­வற்­றுக்­கான உல­க­ளா­விய தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், ஆபத்­தில் இருக்­கும் இந்­திய மக்­க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தேவைப் படும் மருத்­துவ சாத­னங்­க­ளுக்­கான தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இந்­தி­யா­வுக்­கான விமா­னச் சேவை­களும் குறைந்­துள்­ளன. கப்­ப­லில் அனுப்­பி­னால் அதிக காலம் பிடிப்­ப­தால் உட­னடித் தேவை­களை பூர்த்தி செய்­வது சவா­லாக உள்­ளது" என்­றார் திரு பெஞ்­ச­மின்.

சுங்­கத் துறை விதி­மு­றை­களும் முனை­யங்­க­ளி­லி­ருந்து உரிய இடங்­க­ளுக்கு பொருட்­க­ளைச் சேர்ப்­ப­தும் மற்ற சவால்­கள் என்­றா­லும் தங்­கள் பங்­கா­ளி­கள் உதவி தேவைப்­படும் இடங்­க­ளுக்கு பொருட்­களைக் கொண்டு சேர்ப்­பார்­கள் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­த தொழில் சபை (சிக்கி), அனைத்து இந்­தி­ய நிர்­வா­கக் கல்­விக் ­க­ழ­கங்­கள், அனைத்து இந்­தி­ய தொழில்­நுட்­பக் கழ­கங்­கள், தி இண்­டஸ் வர்த்­த­கர்­கள், லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமைச் சங்­கம் ஆகியவை சிங்­கப்­பூர் செஞ்­சிலு­வைச் சங்­கத்­து­டன் சேர்ந்து நிதி திரட்டவும் மருத்­துவப் பொருட்­களை வாங்கி விநி­யோகிக்கவும் உதவி வரு­கின்­றன.

"இத்­திட்­டத்­தில் திரட்­டிய தொகை­யை­விட இந்­தி­யா­வில் துடிக்கும் எத்­தனை உயிர்­களைக் காப்­பாற்­று­கி­றோம் என்­பதே முக்கி­யம்," என்­றார் அனைத்து இந்­தி­ய நிர்­வா­கக் கழ­கத்­தின் தலை­வர் திரு சுரேஷ் ஷங்­கர்.

செஞ்­சி­லு­வைச் சங்­கம்:

இணை­யத்­த­ளம்: redcross.sg/indiacovid19response

காசோலை: 'Singapore Red Cross Society' என்­ற பெயருக்கு காசோலையை எழுதி 'Red Cross House, 15 Penang Lane, Singapore 238486' எனும் முக­வ­ரிக்­கு அனுப்­ப­வும். உங்­கள் பெயர், வீட்டு முக­வரி ஆகி­ய­வற்றை எழுதி 'India COVID19 Response' என்று காசோ­லை பின்­னால் குறிப்­பி­ட­வும்.

பேநவ்: (UEN): S86CC0370EFR2 எனும் கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பி 'India COVID19 Response' என்று அங்­கும் குறிப்­பி­ட­வும்.

சிக்­கி:

டிபி­எஸ் வங்கி கணக்கு எண்: 0720267338, அல்­லது பேநவ் கணக்கு எண் (UEN): 193700026GIBD

கிவ்.ஏஷியா:

give.asia/covid19

எப்­படி நன்­கொடை வழங்­கு­வது?