நிறுவனத்திற்கு $1 மி. அபராதம்

நிறுவனத்திற்கு $1 மி. அபராதம்

2 mins read
347f3368-27ba-4c44-9769-f334ab4d4505
-

2017ல் விரைவுச்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: ஊழியர்கள் இருவருக்குச் சிறை

தீவு விரை­வுச்­சா­லை­யில் கடந்த 2017ஆம் ஆண்டு மேம்­பா­லம் இடிந்து விழுந்த சம்­ப­வம் தொடர்­பில் ஒரு கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு அதி­க­பட்­ச­மாக $1 மில்­லி­யன் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­பர் சாங்கி ரோடு ஈஸ்ட்­டில் உள்ள கட்டி முடிக்­கப்­ப­டாத அந்த மேம்­பா­லம் 2017 ஜூலை 14ஆம் தேதி இடிந்து விழுந்­த­தில் சீன ஊழி­யர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்; ஊழி­யர்­கள் பத்­துப் பேர் காய­முற்­ற­னர்.

அச்­சம்­ப­வம் தொடர்­பில் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறு­தி­செய்­ய, நியாயமான நட­வ­டிக்­கை­களை எடுக்­கத் தவ­றி­விட்­ட­தா­கக் கூறி, 'ஆர் கிம் பியாவ் (ஓகேபி) கான்ட்­ராக்­டர்ஸ்' நிறு­வ­னத்­திற்கு ஒரு மில்­லி­யன் வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன், திட்ட இயக்­கு­நர் யீ சீ கியோங், 51, என்­ப­வ­ருக்கு 13 மாதங்­களும் திட்­டப் பொறி­யா­ளர் வோங் கியூ ஹை, 32, என்­ப­வ­ருக்கு 11 மாதங்­களும் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அறு­பது நாள் விசா­ர­ணை­யின் முடி­வில் அந்­நி­று­வ­ன­மும் அந்­தப் பணி­யா­ளர்­கள் இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­கள் எனக் கண்­ட­றி­யப்­பட்­டது.

கட்­டு­மா­னத்­தில் விரி­சல் காணப்­பட்­ட­போ­தும் அனைத்­துப் பணி­களை­யும் நிறுத்­தத் தவறி, ஊழி­யர்­களை ஆபத்­தான நிலைக்­குத் தள்ளி, அவ்­விரு பணி­யா­ளர்­களும் பொறுப்­பின்றி நடந்­து­கொண்­ட­தாக நீதி­மன்­றம் முன்­ன­தா­கத் தெரி­வித்து இருந்­தது. அத்­து­டன், அவர்­கள் விபத்து தொடர்­பான குறுஞ்­செய்­தி­க­ளை­யும் படங்­க­ளை­யும் அழித்­து­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­களி­டம் பொய்­யு­ரைத்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

விபத்து தொடர்­பில் 2018ஆம் ஆண்­டில் முதன்மை ஒப்­பந்­த­தா­ர­ரான ஓகேபி நிறு­வ­னம் மீதும் தனி­நபர்­கள் நால்­வர் மீதும் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

மேம்­பா­லத்­திற்­கான கட்­டு­மா­னப் பணித்­திட்­டங்­க­ளைத் தயார் செய்த பொறி­யா­ள­ரான இந்­தோனீசியா­வின் ராபர்ட் அரி­யாந்தோ டியாண்ட்ரா, 47, அந்­தக் கட்­டு­மா­னத்­திற்­கான அங்கீ­கா­ரம் பெற்ற சோத­னை­யா­ளர் லியோங் சோ ஹான், 62, ஆகி­யோர் குற்­றம் சாட்­டப்­பட்ட மற்ற இரு­வர்.

2019ல் குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட டியாண்ட்­ரா­வுக்கு 86 வார சிறையும் $10,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. அதே­போல, லியோங்­கிற்கு ஆறு மாத சிறை விதிக்­கப்­பட்­டது. அதை எதிர்த்து, அவர் தொடுத்த மேல்முறை­யீட்டு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.