தந்தையைத் தாக்கி, காயம் விளைவித்த ஆடவர்

தந்தையைத் தாக்கி, காயம் விளைவித்த ஆடவர்

2 mins read
6be01cee-ba32-41a0-a5ef-651b24a6bd29
-

தந்­தை­யைத் தாக்கி, காயப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறி 21 வயது ஆட­வர் மீது நீதி­மன்­றத்­தில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

'கூரிய கருவி' கொண்டு தமது 41 வயது தந்­தையை வேண்­டு­மென்றே தாக்கி, காயம் விளை­வித்த குற்­றச்­சாட்டை பிர­சாந்த் சர­வ­ணன் எனும் அந்த இளை­யர் எதிர்­நோக்­கு­கி­றார்.

கிம் மோ லிங், புளோக் 26க்கும் 27க்கும் இடை­யி­லான நடை­பா­தை­யில் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு 11.23 மணி­ய­ள­வில் அச்சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­கிறது.

பிர­சாந்த் மீது மோசடி குற்­றச்­சாட்­டு­கள் நிலு­வை­யில் இருப்­ப­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­கத் தவறி, சிறைச்­சா­லை­யின் கட்­டாய பின்­க­வ­னிப்­புத் திட்ட விதி­மு­றையை மீறி­ய­தற்­காக அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பிர­சாந்­துக்­குப் பிணை வழங்­கப்­ப­ட­வில்லை. அவ­ரைத் தடுப்­புக்­கா­வ­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது. அவர் மீதான வழக்கு பின்­னர் விசா­ர­ணைக்கு வரும்­போது மேலும் பல குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தம் மக­னால் 41 வயது ஆட­வர் ஒரு­வர் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் காயம் அ­டைந்த அவர் சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தா­க­வும் நேற்­றுக் காலை­யில் போலிஸ் தெரி­வித்­தது.

சம்­பவ இடத்­திற்கு போலிஸ் செல்­லு­முன் அவ­ரின் மகன் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகன்­று­விட்­டார். தந்­தை-மகனுக்கு இடையே முன்­ன­தா­கவே பிரச்­சினை இருந்­தி­ருக்­க­லாம் என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

விசா­ர­ணை­ மற்றும் போலிஸ் படக்­க­ரு­வி­களில் பதி­வான படங்­களின் துணை­யு­டன் கிள­மெண்டி, ஜூரோங் போலிஸ் பிரிவு அதி­காரி­கள், குற்­றம் நிகழ்ந்த நான்கு மணி நேரத்­திற்­குள் சந்­தே­கப் பேர்­வ­ழி­யைப் பிடித்­து­விட்­ட­னர்.

ஆபத்­தான முறை­யில் வேண்டு­மென்றே தாக்கி காயம் ஏற்­ப­டுத்­திய குற்­றம் மெய்ப்­பிக்­கப்­பட்­டால் பிரசாந்துக்கு ஏழாண்டு வரை சிறையும் அபராதமும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.