முஃப்தி: கொண்டாட்டத்திற்கு இடையே விழிப்புடன் இருங்கள்

முஃப்தி: கொண்டாட்டத்திற்கு இடையே விழிப்புடன் இருங்கள்

2 mins read
40ae502b-5ee2-4fc6-add0-7053290d9efe
யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் நேற்று கட்டுப்பாடுகளுடன் நடந்த கூட்டுத் தொழுகை. படம்: முயிஸ் -

இரண்­டா­வது ஆண்­டாக நோன்­புப் பெரு­நாள் கொண்­டாட்­டங்­கள் சிங்கப்­பூ­ரில் ஆர­வா­ர­மின்றி கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நடக்­க­வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. சமூக ஒன்­று­கூ­டல்­களில் கட்­டுப்­பாடு இருப்­ப­து­டன் பள்­ளி­வா­சல்­க­ளின் கூட்­டுத் தொழு­கைக்­காக வரு­வோரின் எண்­ணிக்­கை­யி­லும் வரம்பு விதிக்கப்பட்டுள்­ளது.

இதற்­கி­டையே உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள யூசோஃப் இஷாக் பள்­ளி­வா­ச­லுக்கு நேற்று காலை வருகை அளித்­தி­ருந்த இஸ்­லா­மிய சம­யத் தலை­வர் முஃப்தி நசி­ரு­தீன் முகம்­மது நசிர், தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­கு­மாறு முஸ்­லிம்­க­ளுக்கு அறி­வு­றுத்தி­னார்.

"நம் மூத்­தோர், உற­வி­னர்­கள், சமூ­கத்­தி­னர் அனை­வ­ரை­யும் பாது­காக்கத் தேவை­யான முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுப்­போம். இந்த விழாக் காலத்­தில் மட்­டு­மல்­லா­மல் அதற்­குப் பின்­னும் தொற்­று­கள் ஏற்­படும் நிலையை நாம் தவிர்க்­கப் பார்ப்­போம்," என்­றார் அவர்.

சென்ற ஆண்டு நோன்­புப் பெரு­நாள் மே 25ஆம் தேதி­யன்று கொண்­டா­டப்­பட்­டது. அப்­போது சிங்­கப்­பூ­ரில் அதி­ரடி கிருமி முறி­யடிப்பு கால­கட்­டம். சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (முயிஸ்), ஒன்­று­கூ­டல்­க­ளுக்­குத் தடை­வி­தித்­தி­ருந்­தது.

அத்­து­டன் சிங்­கப்­பூ­ரின் 70 பள்ளி­வா­சல்­களும் அந்த கால­கட்­டத்­தில் மூடப்­பட்­டன.

இவ்­வாண்டு பள்­ளி­வா­சல்­களில் சிறப்பு நோன்­புப் பெரு­நாள் தொழுகை­கள் இருந்­தும் முஸ்­லிம்­கள் பலர் அவற்­றில் கலந்­து­கொள்ள முடி­ய­வில்லை என்­பதை டாக்­டர் நசி­ரு­தீன் குறிப்­பிட்­டார்.

"ஆனால் இதை நாம் இரு வேறு வித­மாக அணு­க­லாம். இவ்­வாண்­டின் நோன்­புப் பெரு­நாளை ஓர் இழப்­பாக நாம் பார்க்­க­லாம், அல்­லது நமக்கு வாய்த்­துள்ள இறையருளை ஏற்­றுக்­கொண்டு நன்­றி­யு­ணர்­வு­டன் கொண்­டா­ட­லாம்," என்று தம் விளக்­கப் பேரு­ரை­யில் அவர் சொன்­னார். பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வர முடி­யா­மல் போன­வர்­கள், முஃப்தி­யின் உரையை, 'யூடி­யூப்' வழி நேர­லை­யா­கக் காண முடிந்­தது.

சமூ­கத் தொற்­று­கள் அண்­மைய கால­மாக அதி­க­ரித்து வரு­வ­தைக் கருதி மே 8 முதல் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டன. மே 30 வரை ஐவர் கொண்ட குழுக்­க­ளாக மட்­டுமே மக்­கள் ஒன்­று­கூட அனு­மதிக்­கப்­படும். இந்த எண்­ணிக்கை முன்­ன­தாக எட்­டாக இருந்­தது.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளின்­படி பள்ளி­வா­சல்­களில் நடக்­கும் ஒவ்­வொரு கூட்டு தொழு­கை­யி­லும் 100 பேர் மட்­டுமே கலந்­து­கொள்ள முடி­யும். இது முன்­ன­தாக 250 ஆக இருந்­தது.

பள்­ளி­வா­ச­லுக்­குள் வரும் 100 பேரும் இரண்டு பகு­தி­க­ளாக பிரிக்­கப்­பட்ட நிலை­யில் தங்­கள் தொழுகை­யில் ஈடு­ப­டு­வர்.

இதே கட்­டுப்­பா­டு­கள் நேற்று காலை நடை­பெற்ற சிறப்பு நோன்­புப் பெரு­நாள் தொழு­கை­க­ளின்­போ­தும் பெரும்­பா­லான பள்­ளி­வாசல்­களில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன.