2,600 வெளிநாட்டு ஊழியர்களுக்கு விழாக்கால உற்சாகம்

கடு­மை­யான கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. இக்­கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடை­யி­லும் 30 தங்­கு­வி­டு­தி­க­ளைச் சேர்ந்த சுமார் 2,600 வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு, நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு நேற்று தட­பு­டல் விருந்­தும் இல­வச 'லுங்கி'யும் வழங்­கப்­பட்­டது.

துவாஸ் தங்­கு­வி­டுதி ஒன்­றுக்கு நேற்று வருகை அளித்த சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­தின் துணை முஃப்தி உஸ்­தாஸ் முகம்­மது ஹனான் ஹசான், கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளைக் குறைந்த எண்­ணிக்­கை­யில் வைத்­தி­ருக்க உத­வி­ய­தற்­காக கட்­டு­மான ஊழி­யர்­க­ளுக்­குத் தமது நன்­றி­யைத் தெரி­வித்­தார்.

துவாஸ் தங்­கு­வி­டு­தி­யில் 100 பேருக்கு இல­வச உண­வும் லுங்கி­களும் வழங்­கப்­பட்­டன.

"கொவிட்-19 பர­வ­லுக்கு முன்­னர், நோன்­புப் பெரு­நா­ளன்று அவர்­கள் திடல்­களில் கிரிக்­கெட் விளை­யா­டிக்­கொண்­டும் நண்­பர்­களு­டன் உல்­லா­ச­மா­கப் பொழு­தைக் கழித்­துக்­கொண்­டும் இருப்­பர். ஆனால், இப்­போது அவர்­கள் அவ்­வாறு செய்ய முடி­யா­மல் போனது. இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தில் அவர்­க­ளு­டன் நாங்­கள் இணைந்­தி­ருக்­கி­றோம். இந்­த­ நிலை­யைக் கடந்­து­வர உற்­சா­கம் தரு­கி­றோம்," என்­றார் டாக்­டர் ஹனான். காலைத் தொழு­கை­யைச் சென்ற ஆண்டு செய்ய முடி­யா­மல் போன நிலை­யில் இவ்­வாண்டு கட்­டுப்­பா­டு­க­ளு­டன் தொழு­கையை நிறை­வேற்ற முடிந்­தது தொடர்­பில் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார் அவர்.

"அனை­வ­ரும் வெளியே சென்று உற­வி­னர்­க­ளைப் பார்க்க விரும்­பு­கி­றார்­கள் என்­பது எங்­களுக்­குப் புரி­கிறது. ஆனால், நாம் இதை ஓராண்­டாக கடந்து வந்து­விட்­டோம். அத­னால் தொடர்ந்து பொறுமை காப்­போம்," என்­றார்.

'Alliance of Guest Workers Outreach' அமைப்பு இந்த வரு­டாந்­திர விழாக்­கால விநி­யோக நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

நோன்­புப் பெரு­நா­ளுக்கு முன்பே அமைப்பு 14 தங்­கு­வி­டுதி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உணவு, அன்­பளிப்பு ஆகி­ய­வற்றை விநி­யோ­கம் செய்­யத் தொடங்­கி­விட்­டது. இந்த 14 தங்­கு­வி­டு­தி­களில் இருப்­போர், வேலைக்­காக மட்­டுமே தங்­க­ளின் இருப்­பி­டத்தை விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!