மசகோஸ்: சிங்கப்பூர் முஸ்லிம்கள் மீள்திறன் மிக்கவர்கள்

மசகோஸ்: சிங்கப்பூர் முஸ்லிம்கள் மீள்திறன் மிக்கவர்கள்

1 mins read
63a0f079-bd0f-4f56-8166-19ab070133e1
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளு­டன் இரண்­டா­வது நோன்­புப் பெரு­நாளை இங்­குள்ள முஸ்­லிம்­கள் கொண்­டாடி வர தங்­க­ளின் மீள்­தி­ற­னைக் காட்­டி­யுள்­ள­தாக முஸ்­லிம் விவ­காரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கூறி­யுள்­ளார்.

"சமூ­கத் தொற்று மீண்­டும் பரவி வரு­வதை அடுத்து, கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் அறி­முகப்­படுத்­தப்­பட்­டன. பலர் இத­னால் வருத்­தம் அடைந்­தி­ருப்­பார்­கள் என்­பதை அறி­வேன்.

"ஆனால், இது தேவை என்­பதைப் புரிந்­து­கொண்­ட­தற்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

"அனை­வ­ரது பாது­காப்­பிற்­கா­க­வும் நாம் நம் பங்கை ஆற்­றி­வ­ரும் வேளை­யில் சமூ­கத்­தி­னர் அமைதி­யும் பொறு­மை­யும் காக்க வேண்டு­கி­றேன்," என்று அமைச்­சர் அறி­வு­றுத்­தி­னார்.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு நிலைமை மேம்­பட்­டுள்­ளது என்ற திரு மச­கோஸ், பள்­ளி­வா­சல் அதி­கா­ரி­கள், தொண்­டூ­ழி­யர்­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­குத் தமது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.