'கட்டுப்பாடுகள் இருந்தும் குடும்பப் பிணைப்பு வலுவானது'

'கட்டுப்பாடுகள் இருந்தும் குடும்பப் பிணைப்பு வலுவானது'

2 mins read
624d0a63-8b02-4c5c-9839-24dd78ce9227
குடும்பத்தாருடன் ஹபிடா மற்றும் அவரின் கணவர். படம்: ஹபிடா -

கி. ஜனார்த்­த­னன்

நோன்­புப் பெரு­நா­ளைக் கடந்த ஆண்டு ஹபிடா ஷா, 34, கொண்­டா­டி­ய­போது, கிருமி முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­கள் நடை­மு­றை­யில் இருந்­தன. புதி­தா­கத் திரு­ம­ண­மாகி இருந்­த­தால் அது அவ­ரது தலைப் பெரு­நா­ளும் கூட. அடுத்த கொண்­டாட்­டம் சிறப்­பாக அமை­யும் என்று இவ்­வாண்­டின் நோன்­புப் பெரு­நா­ளுக்­காக காத்­தி­ருந்த ஹபிடா, மீண்­டும் ஏமாற்­றம் அடைந்­தார். நினைத்­த­து­போல இவ்­வாண்­டின் கொண்­டாட்­டம் அமை­ய­வில்லை என்று சற்று ஆதங்­கம் தொனிக்­கும் குர­லில் கூறி­னார் நிதி ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­யும் ஹபிடா.

"உற­வி­னர்­கள் அனை­வ­ரு­ட­னும் புகைப்­ப­டம் எடுக்க முடி­ய­வில்லை. கடை­சி­யாக என் திரு­மணத்­தின்­போ­து­தான் புகைப்­ப­டம் எடுத்­துக்­கொண்­டோம்," என்­றார்.

அவ­ரின் பாட்டி 75 வயது பாத்தி முத்து ஹாஜா மைதீ­னின் வீட்­டில் ஹபிடா இவ்­வாண்டு நோன்­புப் பெரு­நா­ளைக் கொண்­டா­டி­னார்.

குடும்­பத்­தி­ன­ருக்கு பூலோர் வாஜேட், அகார் அகார், முறுக்கு ஆகி­ய­வற்­றைச் செய்­த­தாக திரு­மதி ஹபி­டா­வின் பாட்டி திரு­மதி பாத்தி முத்து தெரி­வித்­தார்.

அனை­வ­ரும் ஒன்­று­கூட முடி­ய­வில்லை என்ற வருத்­தம் தமக்கு இவ்­வாண்டு இருந்­தா­லும் அடுத்த நோன்­புப் பெரு­நா­ளின்­போது அனை­வ­ரும் ஒன்­றாக மகிழ்ச்­சி­யு­டன் இருக்­க­வேண்­டும் என்று அந்த மூதாட்­டி­யும் கூறி­னார்.

ஒன்­று­கூ­டல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டுள்­ள­தால் நேரில் காண முடி­யா­த­வர்­க­ளு­டன் காணொளி வழி­யாக இணைந்து கொண்­டா­டி­ய­தாக திரு­மதி ஹபிடா கூறி­னார்.

"கொவிட்-19 கால­கட்­டத்­திற்கு முன்­னர் நாங்­கள் ரம­லான் மாதத்­தின்­போது பள்­ளி­வா­சல்­களில் தொழு­வது வழக்­கம். ஆனால் இம்­முறை நோன்பு மாதத்­தின்­போது வீட்­டி­லேயே அதி­கம் கூட்­டுத் தொழுகை மேற்­கொண்­டோம். குடும்­ப­மாக இணைந்து அவ்­வாறு செய்­தது எங்­க­ளுக்­குள் பிணைப்பை வலுப்­ப­டுத்­தி­யது," என்று அவர் கூறி­னார்.

அடுத்த கொண்­டாட்­டத்­தின்­போது உற­வி­னர்­கள், நண்­பர்­கள் அனை­வ­ரு­ட­னும் ஒரே கூரை­யின்­கீழ் மகிழ்ச்­சி­யு­டன் பெரு­நா­ளைக் கழிக்க வேண்­டும் என்று நம்­பிக்­கை­யு­டன் இருக்­கி­றார் திரு­மதி ஹபிடா.