மொழிபெயர்ப்பு: கூடுதல் ஆதரவு

மொழிபெயர்ப்பு: கூடுதல் ஆதரவு

3 mins read
0b2b98ce-49ef-4a9e-a310-486f7c942bdb
-

மொழி­பெ­யர்ப்­புத் திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்தை தொடர்பு, தக­வல் அமைச்சு மேம்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னால் இத்­திட்­டத்­துக்கு கூடு­தல் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­கள் தகு­தி­பெ­று­கின்­ற­னர்.

இத்­திட்­டம் மூலம் வழங்­கப்­படும் மானி­யத்தை இவ்­வாண்டு பெறு­பர்­க­ளுக்கு முன்­பை­விட ஐந்து விழுக்­காடு கூடு­த­லாக நிதி­யு­தவி கிடைக்­கும். மேம்­ப­டுத்­தப்­பட்ட மொழி­பெ­யர்ப்­புத் திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்­துக்­கான விண்­ணப்­பம் கடந்த மாதம் 1ஆம் தேதி­யன்று தொடங்­கி­யது. விண்­ணப்­பத்­துக்­கான இறுதி நாள் ஜூன் 30. www.mci.gov.sg/ttds இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று விண்­ணப்­பிக்­க­லாம்.

கூடு­தல் உள்­ளூர் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளுக்கு இந்­தத் திட்­டத்­தைக் கொண்­டு­போய் சேர்க்க சில

மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

மொழி­பெ­யர்ப்­பில் குறைந்­தது ஓராண்டு அனு­ப­வம் உள்ள, பணி­யில் நன்கு செயல்­படும் தனி­யார் துறை ஊழி­யர்­களும் இத்­திட்­டத்­தில் பங்­கெ­டுக்­க­லாம்.

கொவிட்-19 சூழ­லில் மொழி

பெயர்ப்­பா­ளர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ரவு வழங்க கூடு­தல் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இவ்­வாண்டு மானி­யம் பெறு­ப­வர்­க­ளுக்­குத் தலா 95% உத­வித்­தொ­கை­யு­டன் அதி­க­பட்­சம் $10,000 வழங்­கப்­படும்.

இதற்கு முன்பு திட்­டத்­தில் பங்­கெ­டுத்­த­வர்­க­ளுக்கு மொழி­பெ­யர்ப்பு தொடர்­பான திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்­துக்­கான செல­வில் 90% உத­வித் தொகை மட்­டுமே வழங்­கப்­பட்­டது.

திட்­டத்­துக்­குத் தகுதி பெறு

பவர்­கள், வழங்­கப்­படும் மானி­யத்­தைப் பயன்­ப­டுத்தி உள்­ளூர் அல்­லது வெளி­நா­டு­களில் நடத்­தப்­படும் திட்­டங்­களில் பங்­கெ­டுக்­க­லாம்.

குறு­கிய காலப் பயிற்­சி­கள், பயி­ல­ரங்­கு­கள், பட்­ட­யச் சான்­றி­தழ் கல்வி, இளங்­க­லைப் பட்­டக் கல்வி, முது­க­லைப் பட்­டக் கல்வி, முனை­வர் பட்­டக் கல்வி, மாநா­டு­கள், கருத்­து­ரங்­கு­கள், இணை­யம் மூலம் நடத்­தப்­படும் கருத்­த­ரங்­கு­கள், சான்­றி­தழ் வழங்­கும் தேர்­வு­கள் ஆகி­யவை இதில் அடங்­கும்.

விண்­ணப்­பத்­தா­ரர்­கள் ஒன்­றுக்­கும் மேற்­பட்ட திட்­டங்­களில் பங்­கெ­டுக்­க­லாம். ஆனால் நிர்­ண­யிக்­கப்­பட்ட கால­கட்­டத்­துக்­குள் இந்­தத் திட்­டங்­கள் நடத்­தப்­பட வேண்­டும். அப்­போ­து­தான் மானி­யத்தை அவற்­றுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஓராண்டு வரை­யி­லான பயிற்சி களுக்கு இவ்­வாண்டு விண்­ணப்­பம் செய்­ப­வர்­கள் கடந்த ஏப்­ரல் மாதத்­துக்­கும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தங்­கள் பயிற்சி

களைத் தொடங்கி பூர்த்தி செய்­து­ கொள்ள வேண்­டும். ஓராண்­டுக்­கும் மேலான பயிற்சிகளை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்­குள் பூர்த்தி செய்ய வேண்­டும்.

மொழி­பெ­யர்ப்­புத் திறன் மேம்­பாட்­டுத் திட்­டம் 2018ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தி­ல் இருந்து மொத்­தம் 20 மொழி

பெயர்ப்­பா­ளர்­கள் அதில் பங்­கெ­டுத்­துப் பல­ன­டைந்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் மொழி­பெ­யர்ப்­பின் தரத்தை உயர்த்த திட்­டத்­தில் பங்­கெ­டுப்­போ­ரின் அர்ப்­ப­ணிப்பை மானி­யம் அடை­யா­ளம் காண்­ப­தாக தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­ச­ரும் தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு­வின் தலை­வ­ரு­மான சிம் ஆன் தெரி­வித்­தார்.

தாய்­மொ­ழி­யில் பேச, படிக்க விரும்­பு­வோ­ரை­யும் சமூ­கத்­து­டன் உள்­ள­டக்க மொழி­பெ­யர்ப்­புத் துறை­யி­ன­ருக்­குப் பெரும் பங்கு இருப்­ப­தாக அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"மொழி­பெ­யர்ப்­புத் திறன் மேம்­பாட்­டுத் திட்­டம் 2018ஆம் ஆண்­டில் அறி­மு­க­மா­ன­தி­லி­ருந்து தங்­கள் மொழி­பெ­யர்ப்­புத் திறனை மேம்­ படுத்­திக்­கொள்ள விரும்புவோருக்கு நாங்­கள் உத­விக்­க­ரம் நீட்டி வரு­கி­றோம்.

"சிங்­கப்­பூ­ரின் மொழி­பெ­யர்ப்­புத் துறையை இவர்­கள் பலப்­ப­டுத்­து­வர் என நாங்­கள் நம்­பு­கி­றோம். மேம்­படுத்­தப்­பட்ட மொழிபெயர்ப்­புத் திறன் மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் மூலம் திற­மை­யுள்ள மேலும் பல­ருக்கு ஆத­ரவு வழங்க முடி­யும். இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள மொழி­பெ­யர்ப்பு, மொழி­கள் ஆகி­ய­வற்­றில் ஆர்­வம் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­வர வேண்­டும் என விரும்­பு­கி­றோம்," என்று திரு­வாட்டி சிம் ஆன் தெரி­வித்­தார்.

மானி­யம் பெற விண்­ணப்­பம் செய்­ப­வர்­கள் ஆங்­கி­லம்-சீனம் அல்­லது ஆங்­கிம்-மலாய், அல்­லது ஆங்­கி­லம்-தமிழ் மொழி­பெ­யர்ப்­பா­ளர்

களாக இருக்க வேண்­டும்.

மொழி­பெ­யர்ப்பு சேவை வழங்­கும் அமைப்­பில் முழு­நேர ஊழி­ய­ராக இருப்­ப­வர்­கள், வேறு துறை அல்­லது வர்த்­த­கத்­தில் இருந்­தும் வேலை நிமித்­த­மாக அடிக்­கடி மொழி­பெ­யர்ப்பு செய்­ப­வர்­கள், சுய­தொ­ழில் அடிப்­ப­டை­யில் வேறு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்­தா­மல் மொழி­பெ­யர்ப்பு செய்­ப­வர்­கள்

ஆகி­யோர் இத்­திட்­டத்­தில் சேர விண்­ணப்­பிக்­க­லாம்.