எந்தவொரு பேரங்காடி, வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள்ளும் நுழைய, வரும் திங்கட்கிழமை (மே 17) முதல் 'டிரேஸ்டுகெதர்' மூலம் மட்டுமே சேஃப்என்ட்ரி பதிவுமுறையை மேற்கொள்ள முடியும்.
'டிரேஸ்டுகெதர்' சாதனம் அல்லது 'டிரேஸ்டுகெதர்' கைபேசிச் செயலி மூலமான பதிவுமுறை அன்று முதல் கட்டாயமாகிறது.
அதற்கேற்றார்போல கட்டடங்
களின் நுழைவாயில் 'சேஃப்என்ட்ரி கேட்வே' முறையை மாற்றி அமைப்
பதில் வர்த்தக, தொழில் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
'சேஃப்என்ட்ரி கேட்வே பாக்ஸ்' என்னும் நவீன சாதனம் நிறுவப்பட்ட நுழைவாயிலின் வழியாகக் கடக்கும்போது 'டிரேஸ்டுகெதர்' சாதனம் அல்லது செயலியை அதனருகில் காண்பித்தால் போதும்.
பொதுக் கூடங்கள் இத்கைய வசதியை நுழைவாயிலில் அமைக்க ஜூன் 15 வரை காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தொடர்புகொண்ட பெரும்பாலான வர்த்தகச் சங்கங்களும் தொழில்நிறுவனச் சங்கங்களும் புதிய வசதிக்குத் தயாராகிவிட்டதாகக் கூறின. சிறிய, நடுத்தர நிறுவனங்களின் சங்கம் ெதரிவிக்கையில். சங்கத்தில் உறுப்பினராக உள்ள 80 நிறுவனங்களில் சுமார் 80% புதிய ஏற்பாட்டுக்குத் தயாராகிவிட்டதாகக் கூறியதாகத் தெரிவித்தது. மற்றவை ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளதாகவும் அது கூறியது. இச்சங்கத்தில் சுமார் 8,000 சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் உறுப்பினராக உள்ளன.
சிங்பாஸ் செயலி மூலமும் கைபேசி கேமரா மூலம் 'க்யூஆர்' குறியீட்டை வருடுவதன் மூலமும் வருகைப் பதிவை மேற்கொள்ளும் தற்போதைய நடைமுறை விடைபெற இருப்பதால் அதனை உருமாற்றுவதில் பெரும்பாலான நிறுவனங்களுக்குப் பிரச்சினை இல்லை என சங்கத்தின் தகவல் தொடர்பு துணைத் தலைவர் திருவாட்டி லூயிசா லீ கூறினார்.
சில நிறுவனங்கள் இடம் மாறிய பின்னர் 'க்யூஆர்' குறியீட்டை புதுப்பிப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றுள் சில தொழில்நுட்ப, நிர்வாகக் கோளாறுகளைச் சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

