எழுத்தாளர் பொன் சுந்தரராசுக்கு 'கணையாழி' விருது

எழுத்தாளர் பொன் சுந்தரராசுக்கு 'கணையாழி' விருது

1 mins read
cfecaa70-ee4c-4dd1-9b49-936558129927
'கணையாழி' விருதை பெற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு பொன். சுந்தரராசுவுடன் (இடமிருந்து) கவிமாலை அமைப்பின் காப்பாளர் திரு மா. அன்பழகன், கவிமாலை துணைச் செயலாளர் திரு ராஜு ரமேஷ், கவிமாலை தலைவர் திருமதி இன்பா, கணையாழி விருதை ஆண்டுதோறும் அளித்துவரும் திரு எம்.ஏ. முஸ்தபா, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு கே. கார்த்திகேயன், தொழிலதிபர் திரு மு. அப்துல் ஜலீல். படம்: கவிமாலை -

ஏப்­ரல் மாதம் முழு­வ­தும் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூ­ரில் உள்ள தமிழ் அமைப்­பு­களும் தங்­கள் நிகழ்ச்­சி­களை நடத்­தின.

இறு­தி­யாக வழக்­கம்­போல் கவி­மாலை அமைப்பு தமிழ்­மொழி மாத நிறைவு விழாவை இம்­மா­தம் 2ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 6 மணிக்கு 'ஸூம்' வழி நடத்­தி­யது. விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே. கார்த்­தி­கே­யன் கலந்­து­கொண்டு பரி­சு­க­ளை­யும் விரு­து­க­ளை­யும் வழங்­கி­னார்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் சு. மனோ­க­ரன் தமது நிறை­வு­ரை­யில், "இதைப்­போல் மாண­வர்­க­ளின் செயல்­பா­டு­கள் இருந்­தால் வளர்­த­மிழ் இயக்­கம் தமிழ்­மொழி விழாக்­களை நடத்­த­வேண்­டிய அவ­சி­யமே இருக்காது," என்­று வலி­யு­றுத்­தி­னார்.

மகா­கவி பார­தி­யா­ரின் எள்­ளுப் பேர­னும் திரைப்­ப­டப் பாட­லா­சி­ரி­ய­ரு­மான கவி­ஞர் நிரஞ்­சன் பாரதி கலந்­து­கொண்டு வாழ்த்­துரை வழங்­கி­னார்.

திரு எம்.ஏ.முஸ்­தபா ஆண்­டு­தோ­றும் வழங்­கும் கணை­யாழி விருது, எழுத்­தா­ள­ரும் மூத்த தமி­ழா­சி­ரி­ய­ரு­மான பொன் சுந்­த­ர­ரா­சுக்கு வழங்­கப்­பட்­டது. அவருக்கு அப்­துல் ஜலீல் பொன்­னாடை போர்த்த, சிறப்பு விருந்­தி­னர் முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கார்த்­தி­கே­யன் மாலை அணி­வித்து சான்­றி­தழ் வழங்க, முஸ்­தபா கணை­யாழி பூட்டி சிறப்பு செய்­தார்.

தொழி­ல­தி­பர் ஜி.வி.இராம் வழங்­கும் இளங்க­வி­ஞர் தங்­க­முத்­திரை விருதை கவி­மா­லைக் கவி­ஞர் அஷ்­ரப் பெற்­றுக்­கொண்­டார். விழா­வினை மாண­வர்­கள் இர­கு­நா­த­னும் தமிழ்­ம­தி­யும் நெறிப்­ப­டுத்­தி­னர்.