வழக்கமான சோதனையுடன் உடனடி சோதனையும் அமல்

வழக்கமான சோதனையுடன் உடனடி சோதனையும் அமல்

2 mins read
90acc292-dcc9-46fa-87ba-6f0f65c154f6
மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இடமிருந்து சுகாதார அமைச்சின் மருத்துவச் சேவைத் துறை இயக்குநர் கென்னத் மாக், அமைச்சர்கள் லாரன்ஸ் வோங், கான் கிம் யோங், ஓங் யி காங் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிருமித்தொற்றை விரைவாக கண்டுபிடித்து பரவலைத் தடுக்க நடவடிக்கை

சிங்­கப்­பூ­ரில் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று இருக்­கிறதா என்­ப­தைப் பரி­சோ­தித்து உறு­திப்­ப­டுத்த பிசி­ஆர் என்ற பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. ஒரு­வ­ரின் மூக்கு திர­வத்தை பரி­சோ­த­னைக் கூடத்­திற்கு எடுத்­துச் சென்று அங்கு இந்­தச் சோதனை நடத்­தப்­படும்.

பிசி­ஆர் பரி­சோ­த­னை­தான் ஆக நம்­பிக்­கை­மிக்­கது என்­றாலும் அதற்கு மணிக்கணக்­கில் நேரம் பிடிக்­கும். பதி­லாக ஏஆர்டி என்ற பரி­சோ­தனை மூலம் 30 நிமி­டங்­களில் அதே இடத்­தில் முடி­வைத் தெரிந்து கொள்­ள­லாம். ஆனால் பிசி­ஆர் பரி­சோ­த­னையை நம்­பும் அள­வுக்கு இதை நம்ப முடி­யாது.

இப்­போது கடு­மை­யான சுவா­சக் கோளாறு அறி­கு­றி­கள் இருப்­போ­ருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது. அதோடு அவர்­க­ளுக்கு இனி ஏஆர்டி பரி­சோ­த­னை­யும் நடத்­தப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று அறி­வித்­தார்.

யாருக்­கா­வது கிருமி தொற்றி இருந்­தால் அவரை விரை­வாக அடை­யா­ளம் கண்டு தேவை­யான நட­வ­டிக்­கை­களை வேக­மாக எடுத்து அவ­ரி­டம் இருந்து கிருமி பர­வு­வ­தைத் தடுப்­பது இதன் நோக்­கம் என்­றாரவர்.

கொவிட்-19ஐக் கையாள அமைக்­கப்­பட்டு உள்ள பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய சிறப்­புப் பணிக்­குழு நேற்று மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்டத்தை நடத்­தி­யது. அதில் அமைச்­சர் பேசி­னார்.

கடு­மை­யான சுவா­சக் கோளாறு களு­டன் பல துறை மருந்­த­கங்­கள், அவ­சர சிகிச்சை துறை­கள், வட்­டார கொவிட்-19 பரி­சோ­தனை நிலை­யங்­கள் ஆகி­யவற்­றுக்­கும் மூக்கு திரவ பரிசோதனை செய்து கொண்டு வீட்டுக்குச் செல்லும் பொது சுகாதார ஆயத்த மருந்தகங் களுக்கும் செல்­வோ­ருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை நடத்­தப்­படும். பிசி­ஆர் பரி­சோ­தனை தேவை­ப்படும் எல்லா நோயா­ளிக்கும் அந்­தச் சோத­னை­யு­டன் ஏஆர்டி பரி­சோ­த­னை­யும் நடத்­தப்­படும்.

சுவா­சப் பிரச்­சி­னை­க­ளு­டன் கூடிய அனை­வ­ருக்­கும் இந்த இரண்டு பரி­சோ­த­னை­க­ளுக்­கும் ஆகும் செலவை அர­சாங்­கம் ஏற்­கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏஆர்டி சோதனை செய்­து­கொண்­டோர் பிசி­ஆர் பரி­சோதனை­யை­யும் செய்­து­கொள்­ள­வேண்­டும்.

ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் தடம் அறி­வது, தொற்று உள்­ள­வர்­களை தனி­மைப்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்றை வேக­மா­கச் செய்ய முடி­யும்.

இருந்­தா­லும் அறி­கு­றி­க­ளு­டன் கூடி­ய­வர்­கள் உடனடியாக பரி­சோதனைக்கு வரு­வ­தைப் பொறுத்தே இது இருக்­கும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நேற்­றைய கூட்­டத்­தில் பேசிய சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக், பரி­சோ­தனை ஆற்­றலை, தனி­மைப்­படுத்­து­வ­தற்­கான வச­தி­க­ளை விரிவு­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் சோதனைச்சாலை­களு­டன் சுகாதார அமைச்சு செயல்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.