அமைச்சர்: சமூக நோய்த் தடுப்பு அரணை சார்ந்திருக்க இயலாது

அமைச்சர்: சமூக நோய்த் தடுப்பு அரணை சார்ந்திருக்க இயலாது

2 mins read
2ed3269c-1282-4fa2-96eb-92f6f3017732
-

கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­படுத்­தும் ஒரே வழி­யாக சமூ­க நோய்த் தடுப்­பாற்­றலை சிங்­கப்­பூர் சார்ந்­திருக்க முடி­யாது என்று சுகாதார அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

கிரு­மிக்கு எதிரான போராட்­டத்­தில் தடுப்­பூசி நமக்குக் கிடைத்த பொருத்­த­மான ஆயு­த­மாக இருக்­கிறது என்று அவர் கூறினார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்குத் தொடர்ந்து நாம் ஊக்­க­மூட்டி வரு­கி­றோம் என்று கூறிய அமைச்­சர், சமூக நோய் தடுப்­பாற்­ற­லைச் சார்ந்­தி­ருக்க முடி­யாது என்­ப­தை கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யது முக்­கி­ய­மானது என்­றார் அவர்.

பல மருத்­து­வப் பிரச்­சி­னை­களால் சில­ருக்குத் தடுப்­பூசி போட முடி­யாது. தடுப்­பூ­சி­யால் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­ப­டா­மல் இருக்­குமே ஒழிய, கிருமி பர­வு­வதை முற்­றி­லும் தடுக்­கும் ஆற்­றல் தடுப்­பூ­சி­யி­டம் இல்லை என்­றார் அவர்.

தடுப்­பூசி செயல்­திட்­டம் இது­வரை­ நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­கிறது என்­றும் இது அமைச்­சுக்கு ஊக்­க­மூட்­டு­வ­தாக இருக்­கிறது என்­றும் கூறிய அவர், இருந்­தா­லும் 70 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­க­ளைப் பற்றி அமைச்சு அதி­கம் அக்­க­றை கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

சமூக அள­வில் கிருமி தொற்­றாத அள­விற்குத் தடுப்பு ஆற்­றலை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தடுப்­பூசி செயல்­திட்­டத்தைக் கட்­டா­ய­மா­ன­தாக ஆக்க திட்­டம் உண்டா என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்குப் பதி­ல­ளித்த அமைச்­சர், எல்­லா­ருக்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டு­விட்­டால் அதுவே போதும், நமக்கு பாது­காப்பு ஏற்­பட்­டு­வி­டும். கொவிட்-19 முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எல்­லாம் தேவை­யில்லை என்ற சிந்­தனை கூடாது என்று வலி­யு­றுத்­தினார்.

கிரு­மித்­தொற்­றை­யும் பாதிப்­பு­களை­யும் தடுத்துக் கொள்­வ­தில் தடுப்­பூசி ஒரு முயற்­சி­தான். சமூ­கப் பாது­காப்பு இடை­வெளி போன்­றவை தொடர்ந்து முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கும் என்­றார் அவர்.

சுகா­தார அமைச்­சின் சுகா­தா­ரத் துறை தலைமை அறி­வி­யல் வல்­லு­ந­ரான பேரா­சி­ரி­யர் டான் சோர் சுவான், சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­த­பட்­சம் 80 விழுக்­காட்­டி­ன­ருக்குத் தடுப்­பூ­சி­யைப் போட்­டு­விட்­டால் சமூ­கத்­தில் கொவிட்-19 பரவ முடி­யாத அள­வுக்கு அரண் ஏற்­பட்­டு­வி­டும் என்று சென்ற ஆண்டு கூறி­யி­ருந்­தார்.

இருந்­தா­லும் தடுப்­பூசி மூலம் எந்த அள­வுக்குக் கிரு­மிப் பர­வலைத் தடுக்க முடி­யும் என்­பது இனி­மேல்­தான் ஆய்­வு­க­ளின் மூலம் தெரி­ய­வர வேண்­டும் என்று நேற்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தடுப்­பூசி கார­ண­மாக கிரு­மிப் பர­வல் குறை­கிறது. நோய்த்­தொற்றைக் கட்­டுப்­ப­டுத்த அதி­காரி­க­ளுக்­குத் தடுப்­பூசி உத­வு­கிறது என்­றார் அவர்.

கூடு­மானவரை பொரு­ளி­யலை வழக்­க­நி­லைக்­குக் கொண்டு வர உத­வும் ஓர் உத்­தி­யாகவும் தடுப்­பூசி இருக்­கிறது என்று அமைச்சர் கூறி­னார்.