சிங்கப்பூரில் நாளை முதல் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவிருப்பதாக கொவிட்-19 பணிக்குழு அறிவித்தது.
இந்நிலையில், மளிகைப் பொருட்களையும் அத்தி யாவசியப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளும் நோக்கத்தில் பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகளுக்குப் படை எடுத்தனர். அக்கடைகளில் நீண்டவரிசை காணப்பட்டது.
இந்நிலையில, சிங்கப்பூரில் பேரங்காடிகள் உள்ளிட்ட எல்லா சில்லறை வர்த்தகக் கடைகளும் மே 16 முதல் ஜூன் 13 வரை திறந்து இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று மக்களுக்கு உறுதி கூறினார்.
அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவுக்கு இருக் கின்றன. பொருட்கள் வருவதற்கான வழியும் அடை படாமல் உள்ளன என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

