மூச்சு திணறும் இந்தியாவுக்கு முதலுதவி செய்யும் சிங்கப்பூர்; உயிர்நாடியாக உதவிக்கரம்

மூச்சு திணறும் இந்தியாவுக்கு முதலுதவி செய்யும் சிங்கப்பூர்; உயிர்நாடியாக உதவிக்கரம்

2 mins read
44cdf88c-f386-4b8b-b8b3-279da754ca18
சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் உறைகலன்கள், இந்தியாவின் விமானப்படை விமானத்தில் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டு மேற்கு வங்காளத்தில் உள்ள பனாகரா என்ற விமானப்படைத் தளத்தில் தரை இறங்கின. படம்: ஏஎன்ஐ -

இந்­தியா, கொவிட்-19 தொற்று இரண்­டா­வது அலை­யால் மூச்­சு­விடத் திண­றி­வ­ரும் நிலை­யில், அங்கு நில­வும் ஆக்­சி­ஜன் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்க சிங்­கப்­பூர் பல­வழி­க­ளி­லும் கைகொ­டுத்து, நம்­ப­க­மான பங்­கா­ளி­யா­கத் திகழ்ந்து வரு­கிறது.

இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர், சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ண­னுக்கு மூன்று வரி குறுஞ்­செய்­தியை அனுப்­பி­யதை அடுத்து, இந்­தி­யா­வின் 'மிஷன் ஆக்­சி­ஜன்' திட்­டத்­திற்கு சிங்­கப்­பூர் தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கிறது.

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை­யின்­போது இந்­தியா, சிங்­கப்­பூ­ருக்கு ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­யதை நினை­வு­கூர்ந்த டாக்­டர் விவி­யன், இம்­முறை தங்­க­ளா­லான அனைத்து உத­வி­க­ளை­யும் செய்­வதாக உறு­தி­ய­ளித்­தார்.

இந்­திய விமா­னப் படை­யின் சி-17, ஐஎல்-76, சி-130 விமா­னங்­கள் மூல­மாக 46 உறை­க­லன்­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்து இந்­தி­யா­வைச் சென்­ற­டைந்­தன.

அத்­து­டன், ஆயி­ரக்­க­ணக்­கான ஆக்­சி­ஜன் உரு­ளை­கள், ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­கள், செயற்கை சுவா­சக் கரு­வி­கள் உள்­ளிட்ட கரு­வி­களை சிங்­கப்­பூ­ரி­டம் இருந்து இந்­தியா பெற்­றுள்­ளது.

அவை இந்­திய விமா­னப் படை விமா­னங்­கள் மூல­மா­க­வும் இந்­தி­யக் கடற்­ப­டைக் கப்­பல்­கள் மூல­மா­க­வும் இந்­தி­யா­வுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன.

கடந்த மாதம் 28ஆம் தேதி, சிங்­கப்­பூர் விமா­னப் படை­யின் இரு விமா­னங்­கள் ஆக்­சி­ஜன் உரு­ளை­களை­யும் வேறு மருத்­து­வப் பொருள்­களை ஏற்­றிக்­கொண்டு இந்­தியா சென்­றன.

தெமா­செக் அற­நி­று­வ­னம், வேறு பல சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளு­டன் கைகோத்து, 8,000க்கும் மேற்­பட்ட ஆக்­சி­ஜன் செறி­வூட்­டி­கள், 51,000 ஆக்­சி­மீட்­டர்­கள், 27 செயற்கை சுவா­சக் கரு­வி­கள் உள்­ளிட்ட மருத்­து­வக் கருவிகளை இந்­தி­யா­வுக்கு நன்­கொ­டை­யாக வழங்­கியுள்ளது.

இந்­நி­லை­யில், நிரப்­பப்­பட்ட 15 உறை­க­லன்­க­ளை­யும் கிட்­டத்­தட்ட 5,000 ஆக்­சி­ஜன் உரு­ளை­க­ளை­யும் ஏற்­றிச் செல்­ல இந்­தி­யக் கடற்­படை­யின் ஜலஷ்வா கப்­பல் இன்று சிங்­கப்­பூரை வந்­த­டைய இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரி­டம் இருந்து மருத்­துவ உத­வி­க­ளைப் பெற்­றுத் தரு­வதில் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் பி.கும­ரன் முக்­கி­யப் பங்­காற்றி வரு­கி­றார்.

ஐஐடி, ஐஐ­எம் ஆகிய கல்வி நிலை­யங்­க­ளின் முன்­னாள் மாண­வர் சங்­கங்­கள், டிஐஇ சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­சபை (சிக்கி), லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­கம் (லிஷா) போன்ற அமைப்­பு­களும் நிதி திரட்­டி­யும் மருத்­து­வத் தள­வா­டங்­க­ளைக் கொள்­மு­தல் செய்து அனுப்பி வைத்­தும் உத­வி வரு­கின்­றன.

டெல்லி புற­ந­கர்ப் பகு­தி­களில் இருப்­பது போன்ற மக்­கள்­தொ­கை­யைக் கொண்­டுள்ள சிறிய நாடாக இருப்­பி­னும், இந்­தி­யா­வில் மருத்­துவ நெருக்­கடி நில­வும் இவ்­வேளை­யில், சிங்­கப்­பூர் முக்­கிய உயிர்­நாடி­யாக விளங்கி வரு­வ­தாக 'இந்­துஸ்­தான் டைம்ஸ்' செய்தி ஊட­கம் புக­ழா­ரம் சூட்­டி­யிருக்கிறது.