தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டிலிருந்து கற்கும் முறையைப் பின்பற்றும் கூடுதல் பள்ளிகள்

2 mins read
761c54f8-7de0-4a81-93ea-d68b0f7c54a4
கொங் ஹுவா பள்ளி, செயின்ட் ஸ்டீஃபன்ஸ் பள்ளி ஆகியவற்றின் தலா இரு மாணவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோப்புப் படங்கள் -

கொங் ஹுவா பள்ளி, செயின்ட் ஸ்டீ­ஃபன்ஸ் பள்­ளி­ இரண்­டி­லும் தலா இரண்டு மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அத­னால் அந்த இரண்டு பள்ளி­களும் வீட்­டில் இருந்­த­படி கற்­கும் முறைக்கு மாறி­யுள்­ளன.

தொற்­றுக்கு ஆளான மாண­வர்­கள் கொவிட் தொற்­றிய வேறு ஒரு­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­தாக இரண்டு பள்­ளி­க­ளி­லும் ஒட்­டப்­பட்­டி­ருந்த அறிக்­கை­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

அந்த மாண­வர்­க­ளு­டன் நெருக்­க­மான தொடர்­பில் இருந்த பள்ளி ஊழி­யர்­கள், மாண­வர்­கள் அனை­வ­ரும் விடுப்­பில் அல்­லது இல்­லத் தனிமை உத்­த­ர­வின் கீழ் இருப்­பா­ர்கள்.

இரண்டு பள்­ளி­களும் நேற்று இணை­யம் வழி­யான வகுப்­பு­களுக்கு மாறிய அதே வேளை­யில் பள்ளி வளா­கங்­கள் முழு­மை­யாக சுத்­தம் செய்­ய­யப்­பட்டு கிருமி நாசினி ­தெளிக்­கப்­பட்­டது.

அந்த இரண்டு பள்­ளி­க­ளின் மாண­வர்­க­ளைத் தவிர, இயோ சூ காங் தொடக்­கப்­பள்­ளி­யின் ஒரு மாண­வ­ருக்­கும் கொவிட்-19 கிருமி தொற்­றி­யுள்­ளது. அது குறித்து சுகா­தார அமைச்சு கடந்த வியாழக்­கி­ழமை அறி­வித்­தது.

இச்­சம்­ப­வங்­கள் அனைத்­தை­யும் சேர்த்­தால், அண்­மை­யில் கூடிய கொவிட்-19 தொற்­று­க­ளால் கடந்த இரண்டு வாரங்­களில் குறைந்­தது ஐந்து பள்­ளி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

எட்ஜ்­ஃபீல்ட் உயர்­நி­லைப் பள்ளி­யும் விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யும் மற்ற இரண்டு பள்­ளி­கள் ஆகும்.

இதற்­கி­டையே விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யின் மாண­வர்­கள், ஊழி­யர்­கள், குத்­த­கைக்­கா­ரர்­கள் சுமார் 2,200 பேருக்கு கொவிட் -19 தொற்று ஏதும் இல்லை என்று தெரிய வந்­துள்­ளது.

கல்வி அமைச்சு கடந்த வியாழக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் அத­னைத் தெரி­வித்­தது.

தொடக்­கக் கல்­லூரி மாண­விக்கு கொவிட் தொற்று உறு­தி­யான­தைத் தொடர்ந்து பள்­ளி­யு­டன் தொடர்­புள்­ள­வர்­கள் அனை­வ­ருக்­கும் கிரு­மித்தொற்று பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டன.

மாண­வி­யு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தால் தனி­மைப்­படுத்­தப்­பட்ட 95 மாண­வர்­க­ளுக்­கும் எட்டு ஊழி­யர்­க­ளுக்­கும் தொற்று இல்லை என்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

அத­னால் விக்­டோ­ரியா தொடக்­கக் கல்­லூ­ரி­யில் நேரடிப் பாடங்­கள் வரும் திங்­கட்­கி­ழமை மீண்­டும் தொடங்­கும் என கல்வி அமைச்சு கூறி­யது.