இயோ சூ காங் தொடக்கப் பள்ளியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவனுக்கு கடந்த புதன்கிழமை கிருமித்தொற்று இருப்பது உறுதியானவுடன் அந்தப் பள்ளியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து மாணவர்களும் தங்கள் பாடங்களை வீட்டிலிருந்தபடி கற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவனுக்கு ஏற்பட்ட தொற்று பள்ளி சார்ந்ததல்ல என்றும் கிருமி தொற்றியிருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து அவருக்குத் கிருமித்தொற்று ஏற்பட்டது என்றும் கல்வி அமைச்சு விளக்கியது.
கடந்த திங்கட்கிழமை அந்த மாணவன் பள்ளிக்கு வந்தபோது அவர் நலமுடன் இருந்தார். ஆனால் அடுத்த நாளே அவருக்கு உடல்நலமில்லை என்றதால், அவர் மருத்துவரை நாடினார்.
சம்பந்தப்பட்ட மாணவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் கடந்த புதன்கிழமை முதல் இம்மாதம் 24ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

