செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
7716338e-84bf-439d-86d5-97064d5f85b7
-

கட்டுப்பாடுகளால் பொதுப் போக்குவரத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்: ஓங்

பொதுப் போக்குவரத்தின் நடத்துநர்கள் எடுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள், பயணிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பான ஓன்றாக வைத்திருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

உதாரணத்துக்கு, ரயில்களுக்குள் உள்ள காற்று ஆறு நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியேற்றப்பட்டு, சுத்தமான காற்று நிரப்பப்படுகிறது. ரயில் கதவுகள் திறந்து மூடும்போது தூய்மையான வெளிக்காற்று ரயில்களுக்குள் வருகிறது என்று திரு ஓங் விளக்கினார். ரயில்களுக்குள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு பயணிகள் தங்கள் முகக் கவ சத்தைக் கழற்றாமல் இருக்க லாம். மேலும் ரயில்களுக்குள் பேசாமல் இருக்கலாம் என்றார் அவர்.

கொவிட்-19 தொடர்பான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு வின் செய்தியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றபோது, சமூகத்தில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் பொதுப் போக்குவரத்தில் எப்படிப்பட்ட கிருமித் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

"கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முந்திய நிலைமையுடன் ஒப்பிடும்போது, இப்போது ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்வோரின் விகிதம் 70% ஆக இருக்கிறது. நாளை தொடங்கவிருக்கும் புதிய கடுமையான கட்டுப்பாடு களால் அந்த விகிதம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

"பயணிகளின் விகிதம் சரிந்துள்ள போதிலும், ரயில்களும் பேருந்துகளும் எப்போதும்போல வழக்கமான இடைவெளியில் சேவையாற்றிக்கொண்டிருக்கின்றன. ரயில்களில் ஏதாவது ஒரு நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்குமாயின், அது ஓரிரு நிலையங்களைக் கடந்தவுடன் கலைந்துபோகும்," என்றும் அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூர்-ஹாங்காங் சிறப்பு விமானப் பயண ஏற்பாடு மேலும் தாமதமாகலாம்

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான தனிமைப் படுத்தல் இல்லாத சிறப்பு விமானப் பயண ஏற்பாடு மேலும் தாமதமடையலாம் என்றும் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் சமூகத் தொற்று சம்பவங்களே அதற்குக் காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் இங் யி காங் தெரிவித்தார்.

"இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு விமானப் பயணம் மீண்டும் தொடங்குவதற்கான அளவுகோல்களை சிங்கப்பூர் அநேகமாக எட்டமுடியாத நிலையில் உள்ளது. இதன் தொடர்பில் அடுத்த சில நாட்களில் சமூகத் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கையை அணுக்கமாகக் கண் காணிக்கவிருக்கிறோம். இந்தச் சிறப்பு விமானப் பயணத்தை எந்தத் தேதியில் தொடங்கலாம் என்று பரிசீலித்து, முடிவை அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் அறிவிப்போம்," என்றார் அமைச்சர்.

சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் இடையிலான சிறப்பு விமானப் பயணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கு வதாக இருந்தது. அது பின்னர் ஆறு மாதங்கள் கழித்து இம்மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஹாங் காங்கில் கிருமித்தொற்று நிலைமை மோசமடைந்து வந்த தால் இந்த ஏற்பாடு தாமதமானது.

நேற்று கொவிட்-19 அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு ஓங், தாம் ஹாங்காங் கின் வர்த்தக மற்றும் பொருளியல் மேம்பாட்டுச் செயலாள ரிடம் இது குறித்து நேற்றுக் காலை பேசியதாகவும் சிறப்பு விமானப் பயணத்தைப் பாதுகாப்பாகத் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் தங்கள் கடப்பாட்டைத் தெரிவித்துக்கொண்டதாகவும் கூறினார்.

"ஹாங்காங்கில் அன்றாட கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திலிருந்து இரண்டு என்று இருந்து வருகிறது. ஆகவே, அது இப்போது ஒரு பாதுகாப்பான வட்டாரமாகத் திகழ்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இரண்டு அரசாங்கங்களும் சிறப்பு விமானப் பயணத்தைத் தொடங்கலாம் என்று நம்பிக்கை தெரிவித்தன. ஆனால், புதன்கிழமை சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சிறப்பு விமானப் பயணத்துக்கான ஏற்பாட்டைத் தாமதப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை," என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.

ஷங்ரிலா மாநாடு, உலகப் பொருளியல் கருத்தரங்கின் அதிகாரிகளுக்கு விளக்கம்

சிங்கப்பூரில் உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்களும் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்களும் அதிகரித்திருப்பதால், இது குறித்து ஷங்ரிலா கலந்துரையாடல் மற்றும் உலகப் பொரு ளியல் கருத்தரங்கு ஆகிய அனைத்துலக நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களுக்கு சிங்கப்பூரின் நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பபட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரிவித்தார்.

"உலகளாவிய பொதுச் சுகாதார நிலைமை மற்றும் சிங்கப்பூரின் நிலைமை ஆகியவை குறித்து ஏற்பாட்டாளர்கள் மதிப்பீடு செய்து முடிவெடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி களில் பங்கேற்போர் பயணம் செய்வதற்குத் தயாராக இருக் கிறார்களா என்று கணக்கெடுக்க வேண்டும். நிகழ்ச்சி களில் பங்கேற்போருக்கு உயர்தர கிருமித்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்," என்றும் திரு வோங் கூறினார்.