குறைந்த வருமான ஊழியரின் சம்பளம் தொடர்பில் யோசனை

குறைந்த வருமான ஊழியரின் சம்பளம் தொடர்பில் யோசனை

2 mins read
d560e7cb-7208-4b92-853a-529421b87829
-

குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் தொடர்­பான பிற்­சேர்க்கை ஒன்­றை­யும் தேசிய சம்­ப­ளம் மன்­றம் தமது வழி­காட்­டிக் குறிப்­பு­களில் இணைத்­துள்­ளது.

கொவிட்-19 சூழ­லால் வர்த்­த­கச் சரி­வைச் சந்­திக்­கும் முத­லா­ளி­கள், குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தைக் குறைப்­ப­தற்­குப் பதில் அவர்­க­ளின் சம்­பள உயர்வை நிறுத்தி வைக்­க­லாம் என்­பது மன்­ற­தில் புதிய பரிந்­துரை.

இந்த இக்­கட்­டான கால­கட்­டத்­தில் அத்­த­கைய ஊழி­யர்­கள் மீது சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­பட வேண்­டும் என வழி­காட்­டிக் குறிப்­பு­க­ளின் பிற்­சேர்க்கை தெரி­விக்­கிறது.

கொள்­ளை­நோய் தாக்­கத்­தில் இருந்து மீண்டு வரும் தொழில் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளத்தை உயர்த்­து­வது பற்றி பரி­சீ­லிக்­க­லாம் என்­ப­தும் அதன் பரிந்­து­ரை­களில் அடங்­கும்.

இந்­தப் பரிந்­து­ரை­களை குைறந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கான முத்­த­ரப்பு ஊழி­யர்­கு­ழு­வின் பரிந்­து­ரை­க­ளோடு இணைக்க மன­றம் எண்­ணு­கிறது.

குழு­வின் பரிந்­து­ரை­கள் இவ்­வாண்­டின் பிற்­ப­கு­தி­யில் வெளி­யி­டப்­பட உள்­ளன.

புதிய பரிந்­து­ரை­கள் குறித்து சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது.

குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் மீது சிறப்­புக் கவ­னம் செலுத்­தக் கோரும் பரிந்­துரை, பொரு­ளி­யல் மீட்சி மற்­றும் வளர்ச்­சி­யின் மூலம் கிடைக்­கும் பலன்­களை அவர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக உள்­ளது என அந்த அறிக்கை குறிப்­பிட்­டது.

ஒரு­வேளை தங்­க­ளது முத­லா­ளி­கள் இன்­னும் நல்ல நிலைக்கு வராத நிலை­யில் அவர்­கள் மீதான பொரு­ளி­யல் தாக்­கத்­தைக் குறைக்க பரிந்­து­ரை­கள் உத­வும் என்­றும் அது தெரி­வித்­துள்­ளது.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் தலை­வர் மேரி லியூ கூறு­கை­யில் முத­லா­ளி­கள் தங்­க­ளது ஊழி­யர்­க­ளுக்கு வரு­டாந்­திர சம்­பள உத­வித் தொகையை வழங்­கு­வ­தன் மூலம் திற­னா­ளர்­க­ளைத் தக்க வைத்­துக்கொள்­வ­தோடு மீட்­சியை நோக்கி நிறு­வ­னத்தை நல்ல முறை­யில் கொண்டு செல்­ல­லாம் என்­றார்.