பிரதமர் லீ சியன் லூங், மலேசிய, இந்தோனீசிய தலைவர்களுக்கு தமது பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ஆகியோரை திரு லீ தொலை
பேசியில் அழைத்து தமது சொந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து
களைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் நேற்று ெவளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இரு அண்டை நாடுகளுடனான உறவுகளை உறுதி செய்த பிரதமர், கொவிட்-19 விளைவு
களைச் சமாளிப்பதற்கு அவை அளித்து வரும் வலுவான ஆதரவை மெச்சியதாக அறிக்கை குறிப்பிட்டது.
மக்களின் நன்மைக்காக கொவிட்-19 நிலைமையிலிருந்து மீள உதவும் வகையில் இந்த வட்டாரத்தில் நிலவும் அணுக்க ஒத்துழைப்பு தொடருவதை பிரதமர் எதிர்நோக்குவதாகவும் அந்த அறிக்கை கூறியது.

