புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பங்குகள் இரண்டு மாதம் காணாத சரிவை நேற்றுச் சந்தித்தன.
விமானப் போக்குவரத்துத் தொடர்பான பங்குகள் ஆக மோசமான சரிவைச் சந்தித்தன.
உணவகத்தில் அமர்ந்து சாப்பிடும் நடைமுறை நாளை முதல் ரத்தாவதைத் தொடர்ந்தும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை மறுபடியும் இயல்புநிலை யாகத் திரும்ப இருப்பதை ஒட்டியும் நேற்று பங்குச்சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு நேற்று பிற்பகல் 1 மணி அளவில் 3 விழுக்காட்டுக்கும் கீழ் சரிந்தது.
பங்குச் சந்தையில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதிக்குப் பிறகு நிகழ்ந்திருக்கும் ஆக அதிகமான சரிவு இது.

