குழந்தையை சோபா மீது வீசிய பணிப்பெண்ணுக்கு சிறை

குழந்தையை சோபா மீது வீசிய பணிப்பெண்ணுக்கு சிறை

1 mins read
de9acfca-8a1a-4c9b-a54f-108fcd59039e
-

கைக்­கு­ழந்­தை­யைக் தூக்கி வீசிய 36 வயது இந்­தோ­னீ­சிய பணிப்­பெண்­ணுக்கு எட்டு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டு உள்­ளது.

குழந்­தையை மோச­மாக நடத்­திய குற்­றத்தை ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து அவ­ருக்­கான தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குழந்­தை­யின் அடை­யா­ளத்­தைக் காப்­ப­தற்­காக பணிப்­பெண்­ணின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. வீட்டு வேலை­க­ளைச் செய்­ய­வும் இரு குழந்­தை­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ள­வும் 2019 டிசம்­ப­ரில் அந்­தப் பணிப்ெ­பண் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் 4ஆம் தேதி அவர் கைக்­கு­ழந்­தை­யின் கையின் மேல்­ப­குதியைப் பிடித்து சோபாவை நோக்கி பல­வந்­த­மாக வீசி­னார். சோபா­வின் கைப்­பி­டி­யில் குழந்­தை­யின் தலை மோதி­யது.

உறை­யு­டன் கூடிய அந்­தக் கைப்­பிடி மரத்­தா­லா­னது. மோதிய வேகத்­தில் குழந்தை அழு­வது அங்கு நிறு­வப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வா­னது.

ஒட்­டு­மொத்த சம்­ப­வ­மும் கேம­ரா­வில் பதி­வா­னது.

அது நேற்று நீதி­மன்­றத்­தில் காட்­டப்­பட்­டது. வீட்­டி­லி­ருந்த பொருட்­க­ளைச் சித­ற­டித்­த­தால் குழந்தை மீது தமக்கு ஆத்­தி­ரம் ஏற்­பட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் பணிப்­பெண் கூறி­னார்.

நடந்த சம்­ப­வத்தை கண்­கா­ணிப்பு கேம­ரா­வு­டன் இணைக்­கப்­பட்­டி­ருந்த தமது கைபே­சி­யில் பார்த்த குழந்­தை­யின் தாயார் உட­டி­ன­யாக போலிசை அழைத்­தார்.

அவ­ரும் அவ­ரது கண­வ­ரும் விசா­ரித்­த­போது குழந்­தை­யைக் தூக்­கிச்­சென்­ற­போது கைப்­பி­டி­யில் மோதி­விட்­ட­தாக பணிப்­பெண் தெரி­வித்­தார். அது பொய் என்­பதை கண்­கா­ணிப்பு கேமரா நிரூ­பித்­தது.