வசதிகுறைந்த மாணவர்களுக்கு $1.85 மி. அறநிறுவன உதவி

வசதிகுறைந்த மாணவர்களுக்கு $1.85 மி. அறநிறுவன உதவி

1 mins read
e4e7f883-fdd8-45be-ba3c-a9510dafa02d
-

முன்­னாள் துணைப் பிர­த­மர் கோ கெங் சுவீ பெய­ரில் தொடங்­கப்­பட்டு உள்ள அற­நி­று­வ­னம் சிங்­கப்­பூ­ரின் நான்கு சமூ­கங்­க­ளைச் சேர்ந்த வச­தி­கு­றைந்த மாண­வர்­

க­ளின் முன்­னேற்­றத்­திற்­காக $1.85 மில்­லி­யன் தொகையை நன்­கொ­டை­யாக வழங்கி உள்­ளது.

திரு கோவின் 11வது மறை­வு­தி­னத்தை ஒட்டி வழங்­கப்­படும் அந்த நன்­கொடை, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வக் கல்வி பயி­லும் வச­தி­கு­றைந்த மாண­வர்­க­ளுக்­கும் பய­ன­ளிக்­கும் என்று தெரிவிக்கப்பட்டது.

'கோ கெங் சுவீ அற­நி­று­வ­னம்' திரு கோவின் நற்­பண்­பு­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில் கடந்த 2008ஆம் ஆண்டு அவ­ரது மனைவி டாக்­டர் ஃபுவா சுவீ லிய­னால் தொடங்­கப்­பட்­டது.

"வசதி குறைந்­தோ­ரும் தேவை உள்­ளோ­ரும் சமூ­கத்­தில் உள்­ள­னர். அவர்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த வேண்­டும் என்­பதே எனது கண­வ­ரின் கன­வாக இருந்­தது.

"இது­போன்ற மக்­க­ளின் வாழ்க்கை முன்­னேற்­றம் காண கல்வி ஒன்றே வழி என்­பதை அவர் தமது பத­விக்­கா­லம் முழு­வ­தும் உறு­தி­பட சொல்லி வந்­தார்," என்று டாக்­டர் ஃபுவா கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் அமைச்­ச­ர­வை­யில் நிதி, தற்­காப்பு, கல்வி போன்ற துறை­களை வகித்­த­தோடு துணைப் பிர­த­ம­ரா­க­வும் பொறுப்பு வகித்த திரு கோ, நாட்டில் எதிர்­பா­ராத பொரு­ளி­யல் நெருக்­கடி ஏற்­ப­டும்­போது நிதி கையி­ருப்­பைப் பாது­காக்­கும் திட்­டங்­க­ளோடு அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­னத்தை 1981ஆம் ஆண்டு தொடங்­கி­னார்.