விதிமீறினால் இரவுநேரக் கூடங்களின் உரிமம் பறிபோகும்

விதிமீறினால் இரவுநேரக் கூடங்களின் உரிமம் பறிபோகும்

1 mins read
245061d4-4243-4ed6-9466-6d004f293817
-

உணவு, பான வியாபாரத்திற்கு மாறிய இரவு விடுதிக்கூடங்கள் நேற்­றுக் காலை அறி­விக்­கப்­பட்ட புதிய கொவிட்-19 பாது­காப்பு நடை­முறை விதி­களை மீறி­னால் அவர்­கள் தங்­க­ளது விடுதி உரி­மத்தை இழக்­கும் நிலை நேரி­டும்.

இர­வு­நேர வியா­பா­ரங்­கள் மீண்­டும் பழைய நிலைக்­குத் திரும்­பும் வரை அவர்­கள் தங்­க­ளது தொழி­லைக் கைவிட வேண்டி வரும் என்­றும் புதிய உணவு உரி­மத்­திற்­காக அவர்­கள் மறு­ப­டி­யும் விண்­ணப்­பம் செய்ய வேண்­டி­ய­தி­ருக்­கும் என்­றும் நீடித்த நிலைத்­தன்மை மற்று சுற்­றுப்­புற அமைச்சு நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

விதி­மீ­ற­லுக்­காக பத்து உணவு. பானக் கடை­களை மூட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. மூடல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்ட கடை­களில் ஏழு இதற்கு முன்­னர் இர­வு­நே­ரக் கூடங்­க­ளா­கச் செயல்­பட்­டவை.

பெரிய குழுக்­கள் ஒன்­று­சே­ரு­வ­தைத் தடுக்­கத் தவ­றி­யது, நேரடி பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை நடத்தியது போன்ற குற்­றங்­க­ளுக்­காக அந்­தக் கடை­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.