ஆர்ச்சர்ட் நிலையத்தில் மெதுவாகச் சென்ற ரயில்கள்

ஆர்ச்சர்ட் நிலையத்தில் மெதுவாகச் சென்ற ரயில்கள்

1 mins read
f6f17415-9e3d-4b89-bf2a-c6d63fae4513
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆர்ச்சர்ட் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் மூடி திறக்கும் தளமேடை கண்ணாடிக் கதவுகள் சரியாக மூடாமல் போனதை அடுத்து அந்த நிலையம் வழியாக இரு திசைகளிலும் ரயில்கள் மெதுவாக வந்து சென்றன.

அந்த வடக்கு-தெற்கு வழித்தடத்தின் இரு திசை களிலும் ரயில்களில் கதவுகளின் செயல்பாடு பாதிக்கப் பட்டது. என்றாலும் ரயில் சேகைள் பாதிக்கப்படவில்லை என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் இன்று காலை சுமார் 9.30 மணிக்கு ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கதவுகளை விட்டு விலகி இருக்கும் படி பயணிகளைக் கேட்டுக்கொண்ட அந்த நிறுவனம், பொறியாளர்கள் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், ரயில் சேவைகள் வழக்கமாக இயங்குகின்றன, பயணிகளுக்கு உதவ நடைமேடையில் அதிக ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள் என்றும் கூறியது.