சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிய 31 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அவற்றில் 19 சமூக அளவிலான தொற்றாகும்.
சமூகத்தில் ஏற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் இரண்டுக்கு முன்னைய தொற்றுச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இல்லை. 17 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவருடன் தொடர்புடையவர்கள்.
இவைத் தவிர வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லத் தனிமை உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 7 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் ஆவர்.
இதனோடு, சிங்கப்பூரில் 61,536 பேருக்கு கொவிட்-19 கண்டுள்ளது.
இவ்வேளையில், சிங்கப்பூரில் தற்போது 13 கொவிட் தொற்றுக் குழுமங்கள் உள்ளன என்று கடந்த வெள்ளிக்கிழமை கூறப்பட்டது.
பார்க்வே செண்டர் கடைத்தொகுதியில் உள்ள 'லர்னிங் பாயிண்ட்' துணைப்பாட நிலையத்தில் வகுப்புகளில் கலந்துகொண்ட ஐந்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. வகுப்பை நடத்திய துணைப்பாட ஆசிரியருக்கு தொற்று இருந்தது.
அவர்களில் இருவர் செயிண்ட் ஸ்டீபன் பள்ளி மாணவர்கள். ஒருவருக்கு ஏழு வயது. மற்றவருக்கு 9 வயது. கொங் ஹுவா பள்ளி மாணவர்கள் இருவருக்கும் தொற்று உறுதியானது. ஒருவர் 9 வயது சிறுமி. மற்றவர் 8 வயது சிறுவன். இவர்களைத் தவிர்த்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப் பள்ளியில் படிக்கும் 9 வயது சிறு வனுக்கும் தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

