தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 மசெக நகர மன்றங்களில் புதிய பசுமைத் திட்டங்கள்

2 mins read
842434e6-b8c3-4ae0-a491-e1ad7e37b2cd
-

சிங்­கப்­பூ­ரில் மக்­க­ளுக்கு மேலும் இயற்கை வாழ்­வி­டச் சூழலை உரு­வாக்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகுதி­யாக குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் உரம் தயா­ரிப்­பது போன்ற மேலும் பல பசுமை முயற்­சி­களுக்கான திட்­டங்­கள் இடம்பெற்று வரு­கின்­றன.

இதன் தொடர்­பில் மக்­கள் செயல் கட்­சி­யின் 15 நகர மன்­றங்­கள் செயல்­திட்­டங்களை உரு­வாக்கி உள்­ளன. அவை அந்த மன்­றங்­களின் இயற்கை வள திட்­டங்­களை மேம்ப­டுத்­தும்.

இதன் மூலம் சிங்­கப்­பூர் பசுமைத் திட்­டம் 2030க்கு ஆத­ர­வாக அவை திக­ழும். நகர மன்­றங்­கள், குடி­யிருப்­பாளர்­கள், சுற்­றுச் சூழல் துறை வல்­லு­நர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் ஆகி­யோர் சேர்ந்து செயல்­பட அந்­தச் செயல்­திட்­டங்­கள் வாய்ப்பை ஏற்­படுத்­தித்­ தந்து ஊக்­க­மூட்­டும்.

மக்­கள் செயல் கட்சி நிர்­வ­கித்து நடத்­தும் ஒவ்­வொரு நக­ர்ப் பகுதியும் 2025 வாக்­கில் அறவே விர­ய­மில்­லாத, எரி­சக்­தியை மிச்­சப்­ப­டுத்­தக்­கூ­டிய, பசுமைமிக்க வட்­டா­ர­மா­கத் திக­ழும் என்று மக்­கள் செயல் கட்சி நேற்று அறி­வித்­தது.

ஒவ்­வொரு மன்­றத்­தில் இருந்­தும் ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இளம் மசெ­க­வைச் சேர்ந்த தொண்­டர்­க­ளு­டன் சேர்ந்து 'பசுமை நகர் சிறப்புப் பணிக்­குழு' என்ற ஓர் அமைப்பை ஏற்­ப­டுத்­து­வார்.

ஜாலான் புசார் நகர மன்­றத் தலை­வர் வான் ரிசால் வான் சக்­க­ரியா அந்­தக் குழு­வுக்­குத் தலைமை வகிப்­பார்.

எரி­சக்­தியை மிச்­சப்­படுத்­தும் விளக்­கு­க­ளைப் பொருத்­து­வது, விவேகமான விளக்­கொ­ளித் திட்­டம், மேலும் சைக்­கி­ளோட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பது, பல அடுக்கு கார்பேட்டை கூரை­களில் தாவர வளத்தை அதி­கப்படுத்­து­வது ஆகியவை இப்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரும் செயல்­திட்­டங்­களில் உள்­ள­டங்­கும்.

இத­னி­டையே, சிறப்­புப் பணிக்­குழு பற்றி கருத்து தெரி­வித்த மசெக நகர மன்­றங்­க­ளுக்­கான ஒரு­மு­கப்­பாட்­டுத் தலை­வர் லிம் பியோவ் சுவான், புதிய பணிக்­குழு இப்­போ­தைய திட்­டங்­களைப் பரிசீலித்து எவை ஏற்­பு­டையவை என்­பதை மதிப்­பி­டும் என்­றார்.

முதல் அறிக்கை இந்த அண்டு முடி­வில் வெளியிடப்­படும் என்­று டாக்­டர் வான் ரிசால் தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு நகர மன்­ற­மும் சொந்த திட்­டங்­களைக் காலக்­கி­ரம முறைப்­படி வெளி­யி­டும் என்­றும் இந்­தப் பசுமை முயற்­சி­களில் பொது­மக்­கள் முக்­கிய பணி­யாற்றுவர் என்­றும் சிறப்புப் பணிக்­குழு தலை வர் கூறினார்.