பாதிக்கப்படும் விளையாட்டு, கலைத் துறைக்கு கூடுதல் ஆதரவு

பாதிக்கப்படும் விளையாட்டு, கலைத் துறைக்கு கூடுதல் ஆதரவு

2 mins read
426d64ae-d150-4ba8-8629-d8487db67bfb
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சமூ­கப் பர­வல் கார­ண­மாக கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்­ளன. இந்தச் சூழ­லில் கலை­கள், விளை யாட்­டுத் துறைகளுக்கு மேலும் ஆத­ரவு கிடைக்க இருக்­கிறது.

மே 16 முதல் ஜூன் 13 வரை அனு­ம­திக்­கப்­படும் நேரடி கலை நிகழ்ச்­சி­களை நடத்­தும் கலை­கள் மற்­றும் கலா­சார நிறு­வ­னங்க­ளுக்கு, நிகழ்ச்­சிக்கு முன்­ன­தாக இடம்­பெறும் கொவிட்-19 பரி­சோதனைக்கு ஆகும் செலவை கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்சு மானி­ய­மா­கக் கொடுக்­கும்.

இதன் தொடர்­பி­லான மேல் விவ­ரங்­களைத் தேசிய கலை­கள் மன்­றம் வெளியிடும் என்­றும் இந்த அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இது ஒருபுறம் இருக்க, 'கலை, கலா­சார மீள்­தி­றன் உத­வித் திட்­டம்' என்ற ஒரு திட்­டம் மூல­மாகவும் கலைத் துறை பயன் அடை­ய­லாம். இந்த உத­வித் திட்­டத்­தில் சென்ற ஆண்­டில் $75 மில்­லி­யன் போடப்­பட்­டுள்­ளது.

ஸ்போர்ட் சிங்­கப்­பூர் இயக்­கம் அம­லாக்­கும் நிவா­ரண உத­வித் திட்­டங்­கள் மே 30ல் முடி­வ­டைய இருந்­தன. அவை ஜூன் 13 வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளன. அவற்றை விளை­யாட்­டுத் துறை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

இத­னி­டையே, கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங், நேற்று இது பற்றி ஃபேஸ்புக் பக்­கத்­தில் பல விவரங்­களைத் தெரி­வித்­தார். தன் அமைச்­சுக்­குக்­கீழ் வரும் துறை­கள் புதிய கட்டுப்­பா­டு­கள் கார­ண­மாக இரு மடங்கு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறிய அவர், இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­கள் தேவை என்­றார்.

வாழ்க்­கையை மட்­டு­ம் ப­ாரா­மல் வாழ்­வா­தா­ரத்தையும் பார்க்­க­வேண்டிய கால கட்­டம் இது என்று அமைச்­சர் கூறி­னார்.

"பல தொழில்­கள் பாதிக்­கப்­பட்டுள்ளன. பாதிப்­பு­க­ளைச் சமா­ளிக்க செல­வு­களை ஈடு­செய்ய, சிரமமான கால­கட்­டத்­தில் இருந்து மக்­கள் மீண்­டு­வர என்ன உதவி செய்­ய­லாம் என்­பது பற்றி அமைச்­சரவை சகாக்­க­ளு­டன் நான் விவா­தித்­தேன்," என்று அமைச்­சர் எட்­வின் டோங் குறிப்­பிட்­டார்.