தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாங்கி சிறைச்சாலையுடன் தொடர்புள்ள 5,000 பேருக்கு கிருமிப் பரிசோதனை

2 mins read
ea513909-4244-447f-946b-425d4809668c
-

சாங்கி சிறைச்­சா­லை­யில் உள்ள கைதி­கள், ஊழி­யர்­கள், குத்­த­கைக்­கா­ரர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் என சுமார் 5,000 பேருக்கு கொவிட்-19 கிரு­மிப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. சாங்கி சிறைச்­சாலை வளா­கத்­தில் உள்ள சிறைச்­சாலை சமை­ய­ல­றை­யில் பணி­யாற்­றும் சமை­யற்­கா­ரர் ஒரு­வ­ருக்கு கடந்த வியா­ழக்­கி­ழமை கொவிட்19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

அடுத்த சில நாட்­களில் பரி­சோ­த­னை­கள் நடை­பெ­றும் என்று சிங்­கப்­பூர் சிறைச்­சா­லைத் துறை நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

பரி­சோ­த­னை­களை நடத்­து­வ­தற்கு ஏது­வாக, மறு­வாழ்­வுத் திட்­டங்­கள் உள்­பட, சிறைக்­கை­தி­ களுக்­கான அனைத்து நட­வ­டிக்­கை­களும் நிறுத்­தப்­படும். இந்­ந­ட­வ­டிக்­கை­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தால் பாதிக்­கப்­படும் குத்­த­கை­தா­ரர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் அது குறித்து தெரி­விக்­கப்­படும்,

அத்­து­டன், சிறைக்­கை­தி­க­ளுக்­கான நேரடி சந்­திப்­பு­களும், காணொளி சந்­திப்­பு­களும் அடுத்த அறி­விப்பு வரும்வரை நிறுத்­தப்­படும். அவற்­றுக்கு பதில் சிறைக்­கை­தி­கள் தொலை­பேசி அழைப்­பு­க­ளைச் செய்ய வசதி செய்து தரப்­படும்.

சிறைச்­சா­லைக்­குள் செல்ல முன்­ப­திவு செய்­துள்ள குடும்­பத்­தி­ன­ரும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை தொலை­பேசி வழி தொடர்பு கொள்ள ஏற்­பாடு செய்­யப்­படும். மேலும் சிறைக்­கை­தி­கள் அவர்­க­ளின் குடும்­பங்­களை மின் கடி­தங்­கள் வழி தொ­டர்­பு­கொள்ள வசதி உண்டு,

கொவிட்-19 பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த சுகா­தார அமைச்சு நேற்­று­முன்­தி­னம் மேலும் பல நட­வ­டிக்­கை­களை அறி­வித்­த­தன் தொடர்­பில் சிறைச்­சா­லைத் துறை­யும் கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்ட சிறைச்­சாலை சமை­யற்கா­ரர் கடை­சி­யாக புதன்­கி­ழமை வேலைக்­குச் சென்­றார். அன்று பணி முடிந்­த­வு­டன் அவ­ருக்கு உடல் நிலை சரி­யில்­லா­மல் போன­தால் மாலை­யில் மருத்­து­வரை நாடி­னார். வியா­ழக்­கி­ழமை அன்று அவ­ருக்கு கிரு­மித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவ­ருக்கு முன்­ன­தா­கவே தடுப்­பூசி போடப்­பட்டு விட்­டது. அவர் பணி­யாற்­றிய ஏ5 பகு­தி­யில் சமை­ய­லறை மூடப்­பட்­டுள்­ளது.

அவ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த ஊழி­யர்­க­ளை­யும் கைதி­க­ளை­யும் அடை­யா­ளம் கண்டு தனி­மைப்­ப­டுத்­தும் பணி நடை­பெற்று வரு­கிறது. அவ­ரது நெருங்­கிய தொடர்­பில் உள்ள அனை­வ­ரும் தனி­மைப்படுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

சிறைக்­கை­தி­கள் தனிமை உத்­த­ர­வைச் சிறை­யி­லும் மற்­ற­வர்­கள் சுகா­தார அமைச்­சின் தனிமை உத்­த­ரவு விடுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக அமைத்­துள்ள இடங்­க­ளி­லும் தனி­மை­யில் உள்­ள­னர்.