சமூகத்தில் புதிதாக 19 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் புதிதாக 19 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
c4c3bb75-218c-4691-8689-43da6f9a92de
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதிய 31 கொரோனா தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அவற்­றில் 19 சமூக அள­வி­லான தொற்­றா­கும்.

சமூ­கத்­தில் ஏற்­பட்ட தொற்­றுச் சம்­ப­வங்­கள் இரண்­டுக்கு முன்­னைய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளுக்­கும் இடையே தொடர்பு இல்லை. 17 பேர் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

இவை தவிர வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இல்­லத் தனிமை உத்­த­ர­வின்­கீழ் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டள்­ள­னர். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­களில் 7 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள் ஆவர்.

இத­னோடு, சிங்­கப்­பூ­ரில் 61,536 பேருக்கு கொவிட்-19 கண்­டுள்­ளது.

இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் தற்­போது 13 கொவிட் தொற்­றுக் குழு­மங்­கள் உள்­ளன என்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறப்­பட்­டது.

பார்க்வே செண்­டர் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள 'லர்­னிங் பாயிண்ட்' துணைப்­பாட நிலை­யத்­தில் வகுப்­பு­களில் கலந்­து­கொண்ட ஐந்து தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. வகுப்பை நடத்­திய துணைப்­பாட ஆசி­ரி­ய­ருக்கு தொற்று இருந்­தது.

அவர்­களில் இரு­வர் செயிண்ட் ஸ்டீ­பன் பள்ளி மாண­வர்­கள். ஒரு­வ­ருக்கு ஏழு வயது. மற்­ற­வருக்கு 9 வயது. கொங் ஹுவா பள்ளி மாண­வர்­கள் இரு­வ­ருக்­கும் தொற்று உறு­தி­யா­னது. ஒரு­வர் 9 வயது சிறுமி. மற்­ற­வர் 8 வயது சிறு­வன். இவர்­க­ளைத் தவிர்த்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப்­ பள்­ளி­யில் படிக்­கும் 9 வயது சிறு ­வ­னுக்­கும் தொற்று ஏற்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.