இரண்டு துணைப்பாட நிலையங்களில் மாணவர்களுக்கு கிருமித்தொற்று

இரண்டு துணைப்பாட நிலையங்களில் மாணவர்களுக்கு கிருமித்தொற்று

1 mins read
462469e2-a6bd-4436-a0f7-4e19e2502b77
-

இங்­குள்ள மேலும் இரண்டு துணைப்­பாட நிலை­யங்­க­ளைச் சேர்ந்த 2 மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. யுனை­டட் ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள தி லர்­னிங் லாப், காத்­தோங் வீ கடைத்­தொ­கு­தி­யில் உள்ள எச்­சி­எல் (HCL) துணைப்­பாட நிலை­யம் ஆகி­ய­வையே அவை. இரண்டு நிலை­யங்­க­ளி­லும் தலா ஒரு மாண­வ­ருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது,

முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இரண்டு துணைப்­பாட நிறு­வ­னங்­களும் அவற்­றின் எல்லா வகுப்­பு­க­ளை­யும் இணை­யத்­தில் ஸூம் செயலி வழி நடத்­தப்­போ­வ­தாக தெரி­வித்­தன. தி லர்­னிங் லாப், சிங்­கப்­பூ­ரில் 8 கிளை­க­ளை­யும் எச்­சி­எல் 12 கிளை­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றன.

அர­சாங்­கம் புதிய கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­ததால், தி லர்­னிங் லாப் நிலை­யம் ஏற்­கெ­னவே அதன் வகுப்­பு­களை இணை­யத்தில் நடத்த முடிவுசெய்­தி­ருந்­தது. அவ்வகுப்­பு­கள் ஜூன் 13 வரை நடை­பெ­றும்.