நூலகம் செயல்படும் நேரம் குறைகிறது

நூலகம் செயல்படும் நேரம் குறைகிறது

1 mins read
c986142c-aadc-4943-bf47-8674a9d09b57
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூ­கத்­தில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில், அனைத்­துப் பொது நூல­கங்­ களும் செயல்படும் நேரம் குறைக்­கப்ப­டு­கிறது. மேலும் பொது­ மக்­கள் நூல­கத்­தில் செல­வி­டக்­கூ­டிய நேர­மும் குறைக்­கப்­ப­டு­கிறது.

தேசிய நூல­கம், சிங்­கப்­பூர் தேசிய காப்­ப­கம், தேசிய நூல­கக் கட்­ட­டத்­தின் 5வது தளத்­தில் உள்ள படிக்­கும் இடம் ஆகி­ய­வற்­றில் ஒரு­வர் இருக்­கக்கூ­டிய நேரம் இரண்டு மணி நேர­மா­கக் குறைக்­கப்­ப­டு­கிறது. மற்ற நூல­கங்­களில் ஒரு மணி நேரமே இருக்க முடி­யும்.

நூல­கத்­திற்­குச் செல்ல https://www.nlb.gov.sg/Visit/GettingOriented/PlanYourVisit.aspx என்ற இணை­யப் பக்­கத்­தில் முன்­கூட்­டியே பதிவு செய்­து­கொள்­ள­வும்.

அத்­து­டன் மே 16 முதல் ஜூலை 31 வரை நூல­கங்­களில் இர­வல் பெறும் நூல்­கள், பொருட்­க­ளுக்­கான இர­வல் காலம் மூன்று வாரத்­தி­லி­ருந்து ஆறு வார­மாக நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே இர­வல் பெற்ற பொருட்­க­ளுக்­கும் கூடு­தல் காலம் கிடைக்­கும். மேல் விவ­ரங்­களை நூல­கத்­தின் இணை­யப் பக்­கத்­தில் தெரிந்­து­கொள்­ள­லாம்.