விநியோகச் செலவுகளை ஈடுசெய்ய உதவி

விநியோகச் செலவுகளை ஈடுசெய்ய உதவி

2 mins read
8bcd4277-e17c-4a64-a283-79231ba4299a
புதிய திட்டங்களுக்கு உணவு, பானக் கடைக்காரர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், வியா­பா­ரம் செய்ய ஏற்­படும் செல­வு ­களை ஈடு­செய்ய உணவு, பானம் மற்­றும் சில்­லறை வர்த்­த­கங்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி வழங்­கப்­படுகிறது.

அது­மட்­டு­மல்­லாது, மேலும் பல வர்த்­த­கங்­கள் மின்­னி­லக்க

அணு­கு­மு­றை­யைப் பயன்­ப­டுத்த இருக்­கின்­றன. உணவு விநி­யோ­கச் செல­வு­­க­ளின் ஒரு பகு­தியை ஈடு­செய்ய திட்­டம் ஒன்­றும் இணை­யம் மூலம் வர்த்­த­கம் செய்ய சில்­லறை வர்த்­த­கர்­க­ளுக்கு உத­வும் திட்­டம் ஒன்­றும் நேற்று மீண்­டும் நடை­மு­றைப்ப­டுத்­தப்­பட்­டன.

"கொவிட்-19 சூழல் கார­ண­

மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள வர்த்­தங்­க­ளுக்கு இந்­தத் திட்­டங்­கள் உத­விக்­க­ரம் நீட்­டும்.

"இணை­யம் மூலம் வர்த்­த­கம் செய்து வரு­மா­னம் ஈட்­ட­வும் ஏற்­படும் செல­வு­களை ஈடு­செய்­ய­வும் திட்­டங்­கள் துணை புரி­யும்," என்று என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு கூறி­யது.

'டிலி­வரூ', 'ஃபுட்பேண்டா', 'கிராப்­ஃபுட்' ஆகிய மூன்று உணவு விநி­யோ­கச் சேவை­கள் வசூ­லிக்­கும் தர­குக் கட்­டணங்களில் ஐந்து விழுக்­காட்­டுத் தொகையை இத்திட்டங்கள் வழங்கும்.

நேற்றிலிருந்து ஜூன் மாதம் 15ஆம் தேதி வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.

இந்த நிதியுதவிக்குத் தகுதிபெற அங்கேயே உடனடியாக உட்கொள்ள தயாரிக்கப்படும் உணவுவகைகளை கடைகள் விற்க வேண்டும். தின்பண்டங்கள், பனிக்கூழ் போன்ற முன்கூட்டியே பொட்டலம் கட்டப்பட்ட உணவுவகைகளை மட்டுமே விற்கும் கடைகளுக்கு நிதியுதவி கிடைக் காது. திட்டத்தில் பங்கெடுக்க தகுதிபெறும் வர்த்தகங்கள், மேல் குறிப்பிடப்பட்ட மூன்று உணவு விநியோகச் சேவைகளைப் பயன்படுத்தினால் தரகுகளால் ஏற்படும் செலவுகள் தானாகவே குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல வர்த்தகர்கள் இணை­யம் வழி வர்த்­த­கத்­தில் காலூன்ற ஷாப்பீ போன்ற முன்­னணி மின்­வர்த்­த­கத் தளங்­

க­ளு­டன் திட்­டம் இணைந்து செயல்­படும்.

இந்­தத் தளங்­கள் வசூ­லிக்­கும் சேவைக் கட்­ட­ணங்­களை ஈடு­செய்ய தகு­தி­பெ­றும் வர்த்­தங்­க­ளுக்கு உத­வி­யாக ஒரு­முறை வழங்கப்படும் $8,000 வரம்­பு­டன் சேவைக் கட்­ட­ணங்­களில் 80 விழுக்­காடு ஆத­ரவு கிடைக்­கும்

இந்­தத் திட்­டத்­தில் பங்­கெ­டுக்க விரும்­பும் வர்த்­த­கங்­கள் நேற்­றி­லி­ருந்து குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மின்வர்த்­த­கத் தளங்களில் ஏதேனும் ஒரு தளத்துடன் நேர­டி­யாக பதிவு செய்­து­கொள்­ள­லாம்.

இதற்­கி­டையே, நேற்று முதல் ஜூன் 13ஆம் தேதி வரை தனது சேவையைப் பயன்படுத்தும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் உணவு அங்­காடி நிலை­யங்­களில் உள்ள கடை­கள் தரகு செலுத்தத் தேவை­யில்லை என்று கிராப் நிறு­வ­ன­ம் அறி­வித்­துள்­ளது.

திட்­டம் வழங்­கும் ஐந்து விழுக்­காடு நிதி­யு­த­வியை கழித்­து­விட்டு மீத­முள்ள செலவை கிராப் ஏற்­கும். இந்­நி­லை­யில், இந்­தத்

திட்­டங்­க­ளுக்கு உணவு, பானக் கடைக்­கா­ரர்­க­ளிடமிருந்து நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.