ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்டோர் டாக்சியில் செல்லலாம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே இரண்டுக்கும் மேற்பட்டோர் டாக்சியில் செல்லலாம்

1 mins read
65443cf0-81ec-47bd-af77-0491f5f259bf
-

டாக்­சி­க­ளி­லும் தனி­யார் வாடகை கார்­க­ளி­லும் இரண்­டுக்­கும் மேற்­பட்ட பய­ணி­கள் ஒன்­றா­கப் பய­ணம் செய்­ய­லாம்.

ஆனால் அவர்­கள் அனை­வ­ரும் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­

க­ளாக இருக்க வேண்­டும்.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நேற்று முதல் ஜூன் 13 வரை கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று என்று நிலப் போக்­கு­

வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.

பய­ணம் செய்­யும்­போது குடும்­பங்­க­ளி­டையே கொவிட்-19 கிருமி பர­வு­வ­தைத் தடுக்க இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

புதிய கட்­டுப்­பாட்­டின்­கீழ் டாக்சி அல்­லது தனி­யார் வாடகை கார்­களில் ஒன்­றா­கப் பய­ணம் செய்­ப­வர்­கள் வெவ்­வேறு குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தால் அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே பய­ணம் செய்­ய­லாம்.

இந்­நி­லை­யில்ல், டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்­டு­நர்­களும் பயணி­ களும் அனைத்து நேரங்­க­ளி­லும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்று ஆணை­யம் நினை­வூட்­டி­யது.

"முகக்­க­வ­சம் அணி­யாத பய­ணி­க­ளுக்கு டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள் சேவை வழங்­க­க்கூ­டாது," என்று அது கூறி­யது.

வர்த்­தக ரீதி­யான கார் பகிர்­வுச் சேவை­கள் நிறுத்­தப்­படும். இதை மீறி சட்­ட­வி­ரோத கார் பகிர்­வுச் சேவை­களை வழங்­கு­வோர் தொடர்­பான தக­வலை OneMotoring இணை­யப்­பக்­கம் மூலம் தெரி­விக்­கும்­படி பொது­மக்­க­ளி­டம் ஆணை­யம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.