பாதிக்கப்பட்ட சிறைக் கைதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நால்வருக்கு கொரோனா தொற்று இல்லை

பாதிக்கப்பட்ட சிறைக் கைதியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நால்வருக்கு கொரோனா தொற்று இல்லை

2 mins read
b3619425-fbd7-4e5a-9917-51f4c775e76e
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­பட்­டுள்ள சிறைக் கைதி­யு­டன் ஒரே சிறை அறை­யில் இருந்த நால்வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று சிங்­கப்­பூர் சிறைச் சேவை­த் துறை உறுதி செய்­துள்­ளது.

அந்த நான்கு பேருக்கும் மீண்­டும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 32 வயது சிறைக் கைதிக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்­பது தெரிந்­த­வு­டன் இந்த நால்­வ­ரும் உட­ன­டி­யாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இதற்­கி­டையே, சாங்கி சிறைச்­சா­லை­யில் குறிப்­பிட்ட ஓர் இடத்­துக்குச் சென்ற சிறைக் கைதி­கள், சிறைச்­சாலை ஊழி­யர்­கள், பங்காளித்துவ ஆதரவாளர்கள் என 1,050 பேருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 900 பேர் சிறைக் கைதி­கள். இம்­மா­தம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து 12ஆம் தேதி வரை சிறை­யில் உள்ள நிலை­யம் ஏ5க்குச் சென்ற அனை­வ­ருக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை மற்ற சிறைக் கைதி யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நிலை­யம் ஏ5ல் அனைத்து நட­வ­டிக்­கை­களும் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

குடும்­பத்­தி­னர் சந்­திப்பு, ஆலோ­ச­னைக் கூட்­டங்­கள், மறு­வாழ்­வுத் திட்­டங்­கள், அவ­ச­ர­நிலை அல்­லாத மருத்­துவச் சேவை­கள் ஆகியவை அவற்­றில் அடங்­கும்.

பாதிக்­கப்­பட்ட இடங்­கள் அனைத்­தை­யும் கிருமி நாசினி திர­வம் கொண்டு சுத்­தம் செய்­து­விட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டும் அறி­குறி இல்­லா­த­வர்­களை அடை­யா­ளம் காண அடுத்த சில நாட்­களில் மருத்­துப் பரி­சோ­தனை முடுக்­கி­வி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சிறைக் கைதி­கள், ஊழி­யர்­கள், பங்­காளித்துவ ஆதரவாளர்கள் என ஏறத்­தாழ 5,000 பேருக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

பாதிக்­கப்­பட்ட சிறைக் கைதி சாங்கி சிறைச்­சா­லை­யில் உள்ள நிலை­யம் ஏ5ல் இருக்­கும் சமை­ய­ல­றை­யில் வேலை செய்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அங்கு 'சேட்ஸ்' நிறு­வ­னத்­தைச் சேர்ந்த உண­வுப் பிரிவு ஊழி­ய­ரு­டன் அவர் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தார்.

இம்­மா­தம் 13ஆம் தேதி­யன்று அந்த ஊழி­ய­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது.

சிறைக் கைதிக்­கு கொரோனா பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தும் அவர் சிலா­ராங் பார்க் வளா­கத்­துக்கு இட­மாற்­றம் செய்­யப்­பட்­டார். அவ­ரது உடல்­நி­லையை மருத்­துவ அதி­கா­ரி­கள் கண்­

கா­ணித்து வரு­கின்­ற­னர்.

அவ­ரது உடல்­நிலை தற்­போது சீராக இருப்­ப­தா­க­வும் அவ­ரி­டம் கொவிட்-19 அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.