வேலையிடப் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள அக்கறை

வேலையிடப் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள அக்கறை

1 mins read
41ff9b27-0888-4e3c-adfc-4d36ff1fb7eb
-

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக கட்­டு­மா­னம் போன்ற துறை­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் வேலை­யி­டங்­களில் ஊழி­யர்­க­ளுக்­குத் தேவை­யான பாது­காப்பு அம்­சங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

கடந்த ஜனவரி மாதத்­துக்­கும் மார்ச் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் வேலை­யி­டங்­களில் கிட்­டத்­தட்ட 3,300 பேர் காய­ம­டைந்­த­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

கடந்த ஆண்டு அதே கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 3,100 பேர் காய­ம­டைந்­த­னர்.

கடந்த மாதம் வேலை­யி­டங்­களில் காயம­டைந்­தோர் தொடர்­பான தர­வு­கள் இன்­னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து ஏப்­ரல் மாதம் வரை 3,200க்கும் அதி­க­மான வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார முரண்­பா­டு­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து ஏப்­ரல் மாதம் வரை 14 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­தன. சாலை விபத்­து­களில் மாண்ட ஊழி­யர்­கள் இதில் சேர்க்­கப்­ப­ட­வில்லை.