கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நேற்று புதிய நடைமுறைகள் தொடங்கின.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் வழக்கமாக ஒன்றுகூடும் இடங்களில் நேற்று மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
நேற்று நண்பகல் நேரத்தில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி
யாளர்கள் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது கடைகள் திறந்திருந்தபோதிலும் வழக்கமாக இருக்கும் கூட்டம் இல்லை.
வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு தனித்தனியாக சென்றுகொண்டிருந்ததை செய்தியாளர்கள் கவனித்தனர்.
உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை வாங்க அவர்கள் அங்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
கூடுமான வரையில் தங்கு விடுதிகளைவிட்டு வெளியேற வேண்டாம் என தங்கள் முதலாளிகள் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

