புதிய கட்டுப்பாடுகள் அமல்; மக்கள் நடமாட்டம் குறைந்தது

புதிய கட்டுப்பாடுகள் அமல்; மக்கள் நடமாட்டம் குறைந்தது

3 mins read
285bf8df-5b89-4293-b847-4c18ccb63f38
பூமலையில் நேற்றுக் காலையில் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான இலவச யோகா வகுப்பு இடம்பெற்றது. அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பணிப்பெண்கள் முறையான பாதுகாப்பு இடைவெளியுடன் பயிற்சி மேற்கொண்டனர். பாதுகாப்பு இடைவெளித் தூதர்களும் தேசிய பூங்காக் கழக அதிகாரிகளும் கண்காணித்தபடி இருந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூ­கத்­தில் கொவிட்-19 பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் புதிய கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்த முதல் நாளான நேற்று பூங்­காக்­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் சந்­தை­க­ளி­லும் மக்­கள் நட­மாட்­டம் குறை­வா­கவே இருந்­தது.

அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை, சமூக ஒன்­று­கூ­டல்­களில் இரு­வ­ருக்கு மேல் இடம்­பெற அனு­ம­தி­யில்லை; உணவு நிலை­யங்­களில் அமர்ந்து உண்ண முடி­யாது.

தேக்கா சந்தை, உணவு நிலை­யத்­திற்கு நேற்­றுக் காலை சென்று பார்த்­த­போது, வாடிக்­கை­யா­ளர்­கள் மேசை­க­ளை­யும் நாற்­கா­லி­க­ளை­யும் பயன்­ப­டுத்த முடி­யாத வகை­யில் நெகி­ழித்­தாள் கொண்டு மறைக்­கப்­பட்டிருந்­தன. அங்கு கிட்­டத்­தட்ட நான்­கில் ஒரு உண­வுக்­கடை மூடப்­பட்­டி­ருந்­தது. பாது­காப்பு இடை­வெளித் தூதர்­கள் சிலரை அந்தப் பகு­தி­யில் காண முடிந்­தது.

தெமா­செக் இந்­திய ரோஜாக் கடை­யில் கடந்த 17 ஆண்­டு­களாக வேலை செய்து வரும் திரு­வாட்டி ஜரினா பேகம், 55, வாடிக்­கை­யாளர்­வருகை கிட்­டத்­தட்ட 70% குறைந்து­விட்­ட­தாகக் கூறி­னார்.

"கொவிட்-19 தொற்று குறித்து மக்­கள் அதிக எச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­ப­தால் நோய்ப் பர­வல் முறி­யடிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்த கால­கட்­டத்­தை­விட இன்று (நேற்று) காலை வர்த்­த­கம் மோச­மாக இருந்­தது," என்­றார் திரு­மதி ஜரினா.

வரும் மாதங்­களில் தமது தொழில் எப்­படி இருக்­குமோ என்­றும் அவர் கவ­லைப்­ப­டு­கி­றார்.

"ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மக்­கள் அதி­கம் வரு­வர் என்­ப­தால் வியா­பா­ரம் பர­ப­ரப்­பாக இருக்­கும். ஆனால் இன்று (நேற்று) வியா­பாரம் கணி­ச­மா­கக் குறைந்­துள்­ளது. இதே நிலை நீடித்­தால் செல­வு­களை எப்­படி ஈடு­கட்­டு­வது? அதை நினைத்­தால் மன­உ­ளைச்­ச­லாக இருக்­கிறது," என்­றார் தேக்கா நிலை­யத்­தில் ஆடைக் கடை வைத்­திருக்கும் திரு ப.முரு­கே­சன், 58.

அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை வாங்­கு­வ­தற்­காக நேற்று லிட்டில் இந்தியா வந்­தி­ருந்த இல்­லத்­த­ரசி திரு­வாட்டி நித்யா வெங்­கட், 48, "காய்­கறி, பூக்­கள் என எல்­லாப் பொருள்­களும் கடை­களில் அதி­க­ அளவில் இருந்­தன. கூட்­டம் குறை­வாக இருந்­த­தால் நிதா­ன­மாக என் வேலை­களை முடிக்க முடிந்­தது," என்­றார்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, பூமலை, புக்­கிட் தீமா இயற்கை வனப்­ப­குதி ஆகிய இடங்­களில் கூட்­டம் குறைந்­து­விட்­ட­தா­க­வும் பொது­வாக அனை­வ­ரும் விதி­முறை­க­ளைப் பின்­பற்றி நடப்­ப­தா­க­வும் காலை நேரத்­தில் பூங்­கா­விற்கு வழக்­க­மாக வந்­து­செல்­வோர் கூறி­னர்.

புக்­கிட் தீமா இயற்கை வனப்­பகு­தி­யில் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­களும் தேசிய பூங்­காக் கழ­கப் பணி­யா­ளர்­களும் கூட்­டத்­தைக் கண்­கா­ணித்­த­படி இருந்­த­னர். மலை­யே­றி­கள் பெரும்­பா­லும் இரு­வர் இரு­வ­ரா­க­வும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­தை­யும் காண முடிந்­தது.

கடந்த இரு­நாள்­க­ளி­லும் மலை­யேற்­றத்­தில் ஈடு­பட்ட இல்­லத்­த­ரசி திரு­வாட்டி வோங், 56, கூறு­கை­யில், "நேற்று (சனிக்­கி­ழமை) காலை­யில் திரு­வி­ழாக் கூட்­டம்­போல் இருந்­தது. புதிய கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைக்கு வரு­முன், நண்­பர்­கள் அல்­லது குடும்­பத்­தி­ன­ராக பெரிய குழுக்­க­ளாக மலை­யேற முயன்­ற­னர். ஆனால், இன்றோ கூட்­டமே இல்லை. வழக்­க­மான வார­யி­றுதி கூட்­டம்­போல காணப்­ப­ட­வில்லை," என்­றார்.

பூம­லையில் வார நாள்­களின் காலையில் இருப்­ப­தைப் போன்ற கூட்­டமே நேற்­றும் காணப்­பட்­டது.

ஒவ்­வொரு வார இறு­தி­யைப் போல நேற்­றும் தம் நண்­ப­ரு­டன் அங்கு சிற்­றுலா வந்­தி­ருந்­தார் திரு­வாட்டி அனிஸ் அப்­துல், 26.

"வழக்­க­மாக, குழந்­தை­க­ளு­டன் பல குடும்­பங்­கள் வந்­தி­ருப்­ப­தைக் காண முடி­யும். வெளி­நாட்­ட­வர்­கள், இல்­லப் பணிப்­பெண்­கள் என இந்தத் திடலே நிரம்பி இருக்­கும். ஆனால், இப்­போது எவ­ருமே இல்­லா­த­து­போல் இப்­ப­குதி காணப்­படு­கிறது," என்­றார் அவர்.

அங்கு குறைந்­தது மூன்று மீட்­டர் இடை­வெ­ளி­விட்டு, கிட்­டத்­தட்ட 15 வெளி­நாட்­டுப் பணிப்­பெண்­கள் யோகா பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். சமூக நிறு­வ­னம் ஒன்று அனு­மதி பெற்று அங்கு இல­வச யோகா வகுப்பை நடத்­தி­யது. சற்­றுத் தள்ளி இருந்­த­படி பூங்­காக் கழக அதி­காரி­கள் கண்­கா­ணித்­துக்கொண்டு இ­ருந்­த­னர். வகுப்­பில் பங்­கேற்ற அனை­வரும் தங்­க­ளது பெய­ரைப் பதி­வு­செய்து, விரை­வுத் தக­வல் குறி­யீட்டை வருடியதோடு தங்­களது உடல்­வெப்­ப­நி­லை­யையும் பரி­சோதித்­துக்­கொண்­ட­னர்.