பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுத்தார்

பலமுறை அறிவுறுத்தியும் முகக்கவசம் அணிய மறுத்தார்

2 mins read
0de46a05-77b1-44d5-b018-64bb46072bcc
-

மரினா பே சேண்ட்­சில் முகக்­க­வ­சம் அணிய மறுத்த பெண்­ணி­டம் போலிஸ் விசா­ரணை நடத்தி வரு­கிறது.

பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர் ஒரு­வர் பல­முறை கேட்­டுக்­கொண்­டும் அந்த 53 வய­துப் பெண் முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று போலிஸ் வெளி­யிட்ட அறிக்கை கூறு­கிறது.

இதன் தொடர்­பில் நேற்று முன்­தி­னம் மாலை 5.15 மணி­ய­ள­வில் உதவி கோரி போலி­சுக்கு அழைப்பு வந்­தது. பொது இடத்­தில் இடையூறு விளைவித்ததற்காகவும் பாது­காப்பு இடை­வெளி விதி­களை மீறி­ய­தற்­கா­க­வும் அப்­பெண்­ணி­டம் போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

சம்­ப­வம் குறித்த காணொளி பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. அதில், முகக்­க­வ­சம் போடு­மாறு அந்­தப் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர் பல­முறை கேட்­டுக்­கொள்­வ­தும் ஆயி­னும், அதை ஏற்க மறுத்து அப்­பெண் அவ­ரு­டன் வாக்­கு­வாதம் செய்­வ­தும் தெரி­கிறது.

மாறாக, அந்­தத் தூத­ரின் அடை­யாள வில்லை எங்கே என்று திரும்­பத் திரும்ப அப்­பெண் கேட்­ப­தும் காணொ­ளி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இது­போன்று அப்­பெண் முகக்­க­வ­ச­மின்றி சென்று வந்­த­தாக நம்­பப்­ப­டு­வ­தாக போலிஸ் கூறி­யது.

பொது இடங்­க­ளுக்கு முகக்­க­வ­சம் அணி­யா­மல் அப்­பெண் சென்று வந்­தது தொடர்­பில் இரு காணொளி­கள் வெளி­யா­கி­ உள்­ளன.

அவற்­றில் ஒரு காணொளி கடந்த பிப்­ர­வரி மாதம் விவோ­சிட்டி­யி­லும் இன்­னொன்று சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் கிளார்க் கீ சென்ட்­ர­லி­லும் எடுக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. 2வது சம்­ப­வத்­தி­லும் கடைத்­தொ­குதி ஊழி­ய­ரு­டன் அப்­பெண் வாக்­கு­வா­தம் செய்­த­தா­கச் சொல்லப்படுகிறது.

முகக்­க­வ­சம் அணி­யாத அல்­லது முறை­யாக அணி­யாத குற்­றம் உறு­தி­செய்­யப்­பட்­டால், ஆறு மாதங்­கள் வரை சிறை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.