சிங்கப்பூரின் வர்த்தக உருமாற்றத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு புதிய திறன்கள் இருக்க வேண்டும்

சிங்கப்பூரின் வர்த்தக உருமாற்றத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊழியர்களுக்கு புதிய திறன்கள் இருக்க வேண்டும்

2 mins read
e71537fb-3989-44b5-adad-cd685e28abb0
-

மாறி­வ­ரும் வேலைச் சூழ­லுக்கு ஏற்ப, வர்த்­த­கங்­கள் தங்­களை உரு­மாற்­றிக்­கொண்டு வரும் வேளை­யில், ஊழி­யர்­களும் புதிய அல்­லது மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்ட வேலை­ களுக்­கான சரி­யான திறன்­க­ளைப் பெற்­றி­ருக்க வேண்­டும்.

வர்த்­த­கங்­க­ளைத் தவிர, பயிற்சி வழங்­கு­நர்­கள், உயர்­கல்வி நிலை­யங்­கள், தொழி­லா­ளர் சங்­கங்­கள் போன்­றவை ஊழி­யர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்தி, அவர்­க­ளின் வாழ்க்­கைத்­தொ­ழில் முன்­னேற்­றத்­துக்கு உதவ முடி­யும் என்று 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு' நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறி­யது.

அதே­வே­ளை­யில், உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யின் ஆற்­றலை மேம்­ப­டுத்த உத­வும் வெளி­நாட்டு திற­னா­ளர்­களை சிங்­கப்­பூர் திறந்த மன­து­டன் வர­வேற்க வேண்­டும்.

"நிச்­ச­ய­மில்­லாத எதிர்­கா­லத்­துக்­குத் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள, ஊழி­யர்­க­ளின் திறன் மேம்­பாட்­டுக்கு உத­விக்­க­ரம் நீட்ட வேண்­டும்," என்று 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­குழு'வின் இணைத் தலை­வ­ரான தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ தெரி­வித்­தார்.

"இந்­தப் பய­ணத்­தில் ஊழி­யர் ­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து, அவர்­ களுக்­குத் தேவைப்­படும் உத­வி ­க­ளை­யும் வளங்­க­ளை­யும் நாங்­கள் வழங்­கு­வோம். அதன் மூலம் அவர்­கள் கொவிட்-19க்குப் பிந்­திய உல­கில் புதிய, மேம்­பட்ட வேலைகளில் பணி­யாற்ற முடி­யும்."

"ஊழி­யர்­கள் தங்­களை மேம்­ ப­டுத்­திக்­கொள்ள, தொழிற்­சங்­கங்க­ளு­டன் நிறு­வ­னங்­கள் இணைந்து பணி­யாற்றி, ஊழி­யர் களுக்­குத் தேவை­யான பயிற்­சி­களை அடை­யா­ளம் கண்டு அதற்­கேற்­ற­வாறு திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­களை நடத்த வேண்­டும்," என்­றும் அமைச்­சர் லீ பரிந்­து­ரைத்­தார்.

கொவிட்-19 கொள்­ளை­நோ­யின் தாக்­கம் பற்றி பேசிய திரு லீ, கடும் பாதிப்­புக்­கு உள்­ளா­கி­யி­ருக்­கும் பய­ணத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு மறு­ ப­யிற்சி அளித்து, அவர்­கள் மற்ற வேலை­களில் பணி­யாற்ற தகுந்த நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்­பதை பணிக்­குழு அறிந்­துள்­ளது என்­றார்.

நல்ல தர­மான வேலை­க­ளைக் கொண்ட ஒரு உயர் திறன்­மிக்க ஊழி­ய­ரணி, பொரு­ளி­யல் உரு­மாற்றத்­துக்­குப் பெரி­தும் உத­வி­யாக இருக்­கும்.

நம்­மி­டம் உள்ள திற­னா­ளர்­களை வைத்தே நாம் நமது போட்­டித்­தன்­மையை வலு­வாக்­கிக்­கொள்ள முடி­யும் என்­றும் அமைச்­சர் வலி­யு­றுத்தி­ னார்.