கட்டுமான நிறுவனங்கள்: பாதுகாப்புடன் வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அனுமதிக்கவும்

கட்டுமான நிறுவனங்கள்: பாதுகாப்புடன் வெளிநாட்டு ஊழியர்களை இங்கு அனுமதிக்கவும்

2 mins read
b5d05ee9-f886-43eb-a70c-5605bbb38f40
-

கொவிட்-19 பர­வ­லால் இங்கு ஏற்­பட்­டுள்ள ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைத் தணிக்க, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பா­க­வும் கட்­டுப்­பா­டு­க­ளோ­டும் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய அரசாங்கம் அனு­ம­திக்க வேண்­டும் என்று கட்­டட, கட்­டு மா­னத் துறை­யைப் பிர­தி­நி­திக்­கும் முக்­கிய அமைப்­பு­கள் கேட்­டுக் கொண்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் குத்­த­கை­யா­ளர்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் பொறி­யி­யல் கழ­கம், சொத்­துச் சந்தை மேம்­பாட்­டா­ளர் சங்­கம், சிங்­கப்­பூர் கட்­ட­டக் கழ­கம் உள்­ளிட்ட அமைப்­பு­கள் அடங்­கிய கட்­டு­மா­னத் துறை கூட்­டுக் குழு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் அத­னைத் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 உரு­மாறிய கிரு­மி­ பர­வி­வ­ரும் நிலை­யில் அர­சாங்­கம் விதித்­துள்ள கட்­டுப்­பா­டு­களை ஆத­ரிப்பதாக குழு கூறியது. அதே வேளை­யில், நாட்டு எல்­லை­கள் நீண்­ட­கா­லத்­துக்கு மூடப்­பட்­டால், ஊழி­யர் பற்­றாக்­குறை மேலும் கடு­மை­யான பிரச்­சி­னை­களுக்கு இட்­டுச் செல்­லும் என்று கூட்­டுக் குழு எச்­ச­ரித்­தது. அதன் தொடர்­பான ­ச­வால்­க­ளை­யும் குழு விவ­ரித்­தது.

கட்­டு­மா­னத் துறை­யில் வெவ்­வேறு தொழில்­க­ளைச் செய்­யும் ஊழி­யர்­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர். ஆனால் போதுமானவர்கள் இல்லை. ஆள் பற்­றாக்­கு­றை­யால் இங்­குள்ள ஊழி­யர்­கள் ஏற்­கெ­னவே கடும் வேலைப் பளு­வைச் சுமந்­துள்­ள­னர். அத­னால் வேலை­யிட விபத்து அபா­ய­மும் அதி­க­ரித்­துள்­ளது.

இங்கு வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பலர், வேலை அனு­மதி முடிந்­த­வு­டன் நாடு திரும்பத் திட்­ட­மிட்­டுள்­ள­னர். அவர்­கள் நாடு திரும்­பும்­போது, தற்­போது நடை­பெற்று வரும் கட்­டு­மா­னத் திட்­டங்­களை முடிக்க, அவர்­கள் இடத்தை நிரப்­ப­ வேண்­டும்.

இல்­லா­விட்­டால், சுமார் 18,000 நிறு­வ­னங்­க­ளை­யும் பல்­லா­யி­ரம் ஊழி­யர்­க­ளை­யும் கொண்ட கட்­டு­மா­னத் துறை இன்னும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­படும் என்று குழு கூறி­யது.

மேலும், தனி­யார், அர­சாங்க வீடு­களை வாங்­கி­யுள்­ள­வர்­கள், அவற்­றின் கட்­டு­மா­னம் முடி­வ­தற்கு இன்­னும் நீண்ட காலம் காத்­தி­ருக்க வேண்­டும் என்று ­குழு எச்­ச­ரித்­தது.

மருத்­து­வ­ம­னை­கள், பள்­ளி­கள், எம்­ஆர்டி ரயில் போன்ற பொதுத் திட்­டங்­க­ளின் கட்­டு­மா­ன­மும் தாம­ த­மா­கக்­கூ­டும் என்­றது அக்­குழு.

இதன் பொருட்டு, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைத் தங்­கள் நாடு­க­ளி­லி­ருந்து பாது­காப்­பா­க­வும் கட்­டுப்­பா­டு­க­ளோ­டும் இங்கு வர­வ­ழைக்­கும் நடை­மு­றையை உரு­வாக்க அர­சாங்­கத்­து­டன் சேர்ந்து பணி­யாற்­றத் தயார் என்­றும் கூட்­டுக் குழு சொன்­னது.

நிதிப் பிரச்­சி­னை­க­ளைச் சமா­ளிக்க கட்­டு­மா­னத் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு கூடு­தல் உத­வி­கள் வழங்­கு­வது பற்றி பரி­சீ­லிக்­கும்­படி கூட்­டுக்­குழு கேட்­டுக் கொண்­டது.

குறைந்த ஊழி­யர்­க­ளைப் பயன்­படுத்­தும் புதிய கட்­டு­மான முறை களுக்கு இன்­னும் வேக­மாக மாற உறுதி கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அது கூறி­யது.