எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி ஏப்ரலில் அதிகரிப்பு

எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதி ஏப்ரலில் அதிகரிப்பு

1 mins read
4068bdff-df99-4dc0-b348-57eafd4daf95
-

சிங்­கப்­பூ­ரின் எண்­ணெய் சாராத உள்­நாட்டு ஏற்­று­ம­தி­கள் கடந்த ஏப்­ரல் மாதத்­தில் மெது­வா­கக் கூடி­யது. பெட்­ரோ­லிய ரசா­ய­னம், இயந்­தி­ரங்­கள் போன்ற மின்­னணு சாராத வர்த்­த­கம் அதி­க­ரித்­தது.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் சென்ற மாதம் ஏற்­று­ம­தி­கள் 6% கூடியதாக என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் ஏப்­ரல் மாத ஏற்று­மதி அதி­க­ரிப்பு மார்ச் மாத நில­வ­ரத்­தை­விட குறை­வாக இருந்­தது.

எண்­ணெய் சாராத உள்­நாட்டு ஏற்­று­ம­தி­கள் 11.5% கூடும் என்று புளூம்­பர்க் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் கலந்­த­கொண்ட வல்­லு­நர்­கள் தெரி­வித்தனர். மாத அடிப்­படை யில் ஏற்­று­மதிகள் மார்ச் மாதத்­தை­விட 8.8% குறைந்­தன.

இந்­நி­லை­யில், ஏற்­று­மதி அதி­க­ரிப்பு அளவு குறைந்து இருந்­தா­லும் பொரு­ளி­யல் மீட்­சிப் போக்கு தொடர்­வ­தாக பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் மின்­னணு துறை ஏற்­று­ம­தி­கள் ஏப்­ர­லில் 10.9% அதி­க­ரித்­தன. இது மார்ச்­சில் 24.2% ஆக இருந்­தது. மின்­னணு சாராத ஏற்­று­ம­தி­கள் 4.7% அதிக­மா­யின. மார்ச்­சில் இந்த அதி­க­ரிப்பு 92% ஆக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரின் பத்து முக்­கிய சந்­தை­க­ளுக்­கான ஏற்றுமதி­கள் ஏப்­ர­லில் குறைந்­தன. புதிய சந்­தை­களுக்­கான ஏற்­று­ம­தி­கள் 70.5% கூடின. மொத்த வர்த்­த­கம் ஏப்­ர­லில் ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் 26.3 விழுக்­காடு கூடி $95.8 பில்­லி­ய­னாக இருந்­தது.