பிரதமருக்கு $260,000 இழப்பீடு கொடுத்த வலைப்பதிவாளர்

பிரதமருக்கு $260,000 இழப்பீடு கொடுத்த வலைப்பதிவாளர்

1 mins read
2ef15d42-2a98-4bde-8301-6d4bd2b5c467
-

வலைப்­ப­தி­வா­ளர் லியோங் ஸி ஹியான் பிர­த­ம­ருக்கு $262,327.22 இழப்­பீடு கொடுத்து இருக்­கி­றார். அந்­தத் தொகையை அவர் பல­ரி­டத்­தி­லும் இருந்து திரட்டி தந்து இருக்­கி­றார்.

அந்த வலைப்­ப­தி­வா­ளர் இழப்­பீ­டாக $133,000 தர­வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. செலவு தொகை­யாக $129,327.22 தர­வேண்­டும் என்­றும் அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மலே­சி­யா­வில் இடம்­பெற்ற 1எம்­டிபி ஊழல் விவ­கா­ரத்­தில் பிர­த­மர் லீ சியன் லூங்கை தவ­றாக ஈடு­படுத்தி செய்தி வெளி­யிட்டு இருந்த 'தி கவ­ரேஜ்' என்ற மலே­சிய செய்­தித் தளத்­தில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு கட்­டு­ரையை தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அந்த வலைப்பதி­வா­ளர் பகிர்ந்­தார்.

அதற்­காக அவ­ருக்கு எதி­ராக அவ­தூறு வழக்­குத் தொடுக்­கப்­பட்­டது. தீர்ப்பு வெளி­யா­னதை அடுத்து இணை­யம் மூலம் பணம் திரட்ட அந்த வலைப்பதி­வா­ளர் ஒரு முயற்­சி­யைத் தொடங்­கி­னார்.

தேவை­யான முழு தொகை­யை­யும் சென்ற சனிக்­கி­ழமை வாக்­கில் லியோங் திரட்­டி­விட்­ட­தாகவும் அந்­தத் தொகைக்­கான காசோ­லை பிர­த­மர் லீயின் வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் நேற்று பிற்­ப­க­லில் ஒப்படைக்கப்பட்ட தாகவும் அவ­ரு­டைய வழக்­க­றி­ஞ­ரான திரு லிம் டியன் கூறினார்.

பிர­த­மர் லீயை அவ­தூறு செய்­த­தற்­காக வழக்­குத் தொடுக்­கப்­பட்ட ராய் நெர்க் என்ற மற்­றொரு வலைப் பதி­வா­ளர் தான் இழப்­பீ­டா­கச் செலுத்த வேண்­டிய $150,000 தொகை­யில் $144,000 தொகையை இணை­யம் மூலம் திரட்டி இருப்­ப­தாக இந்த மாத தொடக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.