அமைச்சர்: உயர் வடிகட்டும் திறன் உள்ள முகக்கவசம் அணிக

அமைச்சர்: உயர் வடிகட்டும் திறன் உள்ள முகக்கவசம் அணிக

3 mins read
94d0d460-9b8a-43fa-95b1-aaa4d46d9ec6
சுகாதார அமைச்சு முகக் கவசத்தின் நன்மைகள் குறித்து விளக்கும் வழிகாட்டியை வெளியிடும். -
multi-img1 of 2

உயர் வடி­கட்­டு­தல் திறன் கொண்ட முகக்­க­வ­சங்­களை அணி­யு­மா­றும், இந்த "முக்­கி­ய­மான கால­கட்­டத்­தில்" கொவிட்-19 பர­வ­லைக் குறைக்க வீட்­டி­லேயே இருக்­கு­மா­றும் சிங்­கப்­பூர் மக்­களை நிதி­ய­மைச்­சர் லாரன்ஸ் வோங் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

குறிப்­பாக மக்­கள் அரு­கில் இருக்­கக்­கூ­டிய மூடப்­பட்ட இடங் ­க­ளுக்­குச் செல்­லும்­போது அதிக வடி­கட்­டு­தல் திறன் கொண்ட முகக்­க­வ­சம் அவ­சி­யம். ​​மருத்­துவ முகக்­க­வ­சம் அல்­லது வடி­கட்டி இணைக்­கப்­பட்­டது போன்­றவை அதிக வடி­கட்­டு­தல் திறன் கொண்­டவை. வெறு­மனே துணி­யி­னால் ஆன முகக்­க­வ­சத்­திற்கு இத்­த­கைய திறன் இல்லை என்­றார் அவர்.

பல்­வேறு உரு­மாற்ற கொவிட்-19 கிரு­மி­கள் எவ்­வாறு பர­வக்­கூ­டி­யவை, அவை காற்­றுத்­து­கள் மூலம் எவ்­வாறு பர­வு­கின்­றன என்­பதை அண்­மைய சான்­று­கள் காட்­டு­வ­தால் தகுந்த முகக்­க­வ­சத்­தைப் பயன்­ப­டுத்­து­வது முக்­கி­யம் என்­றார் திரு வோங்.

கொவிட்-19 பர­வ­லைக் கையா­ளும் அமைச்­சு­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரான திரு வோங், நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தகுந்த முகக்­க­வ­சம் அணி­வ­தன் அவ­சி­யம் குறித்து விளக்­கி­னார்.

முகக்­க­வ­சப் பயன்­பாடு குறித்த வழி­காட்­டலை சுகா­தார அமைச்சு நேற்று புதுப்­பித்­துள்­ளது.

பொது­மக்­கள் அனை­வ­ரும் உயர் வடி­கட்­டு­தல் திறன் கொண்ட முகக்­க­வ­சங்­க­ளைப் பயன்­ப­டுத்­தப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

இதில் குறைந்­தது இரண்டு அடுக்­குத் துணி­யால் ஆன மறு­ப­யன்­பாட்டு முகக்­க­வ­சம், மருத்­துவ முகக்­க­வ­சம் ஆகி­யவை அடங்­கும்.

மக்­கள் கழ­க­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் வழங்­கிய முகக்­க­வ­சங்­க­ளைப் போன்ற மறு­ப­யன்­பாட்டு முகக்­க­வ­சங்­கள் உயர் வடி­கட்­டு­தல் திற­னைக் கொண்­டுள்­ளன என்று அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

"கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் இது நம் அனை­ வ­ருக்­கும் மிக­வும் முக்­கி­ய­மான கால­கட்­டம். புதிய உரு­மாற்­றக் கிரு­மி­கள் கடந்த ஆண்டு எதிர்­கொண்­டதை விட அதி­கம் தொற்­றக்­கூடி­யவை என்­பதை அறி­வோம்.

பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை

"புதிய கிரு­மி­கள் காற்­றுத்­துகள்களில் பர­வக்­கூ­டும் என்­ப­தற்­கான அதி­க­ரித்து வரும் சான்­று­கள் உள்­ளன. எனவே, நாம் மேற்­கொள்­ளும் அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களும் கிருமி பர­வா­மல் பாது­காக்க போது­மா­ன­வை­யாக இருக்­காது. இன்­னும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் தேவை.

"என­வே­தான் அண்­மை­யில் உண­வுக் கடை­களில் உண­வ­ருந்த தடை, மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கற்க ஏற்­பாடு உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட வேண்­டி­யிருந்­தது," என்­றார் அமைச்­சர் வோங்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஒரு மாத காலத்­துக்கு இருவருக்கு மேல் ஒன்றாகக் கூடத் தடை உள்ளிட்ட கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நட­வ­டிக்­கை­க­ளின் பயனை அறிய ஒன்று முதல் இரண்டு வாரங்­கள் வரை ஆகும் என்று திரு வோங் கூறி­னார்.

சமூ­கத்­தில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் அண்­மைய வாரங்­களில் அதி­க­ரித்து வரு­கின்­றன, மேலும் தொற்­றுக் குழு­மங்­கள் பல உரு­வா­கி­யுள்­ளன.

அண்­மைய கட்­டுப்­பா­டு­கள் தொற்று எண்­ணிக்­கை­யைக் குறைக்­கும் எனத் தாம் நம்­பு­வ­தாகக் கூறி­னார் திரு வோங்.

அர­சாங்­கம் தொடர்ந்து நிலை­மையை மிக­வும் கவ­ன­மாக ஆராய்ந்து வரும். தேவை ஏற்­பட்­டால் மேலும் கட்­டுப்­பா­டு­களை விதிப்­பது குறித்து பொதுச் சுகா­தார நிபு­ணர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்­கும் என்று அமைச்­சர் கூறி­னார்.

கிடைக்­கும்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது, முடிந்த வரை­யில் வீட்­டி­லேயே இருப்­பது, சிறந்த பாது­காப்­பைத் தரும் முகக்­க­வ­சங்­களை அணி­வது போன்ற நட­வடிக்­கை­கள் மூலம் கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தில் ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் பங்கை ஆற்ற வேண்­டும் என்­றார் அவர்.

முகக்கவசம் போதிய இருப்பு உள்ளது

சரி­யான முகக்­க­வ­சத்­தைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான வழி­காட்டி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

சரி­யான முகக்­க­வ­சத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தன் நன்­மை­களை மக்­கள் தெரிந்­து­கொள்­ள­வும், மக்­களை ஊக்­கு­விக்­க­வும் இந்த வழி­காட்டி உத­வும்.

அதே நேரத்­தில், தரம் வாய்ந்த முகக்­க­வ­சங்­கள் விற்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த அர­சாங்­கம் விற்­ பனை­யா­ளர்­க­ளு­டன் இணைந்து செயல்­படும்.

முகக்­க­வச உற்­பத்­தி சிங்­கப்­பூ­ரில் உள்­ளது என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் உறுதி அளித்­தார். சில உள்­ளூர் நிறு­வ­னங்­கள் ஏற்­க­னவே மருத்­துவ முகக்­க­வ­சங்­களை உற்­பத்தி செய்­கின்­றன. இறக்­கு­ம­தி­யும் அதி­க­ரிக்­கும். போது­மான இருப்­பும் உள்­ளது. எனவே, பதற்­ற­ம­டைந்து முகக்­க­வ­சம் வாங்க விரை­யத் தேவை­யில்லை என்­றார் அவர்.