டான் டோக் செங்கில் மீண்டும் உள்நோயாளிகளுக்கு அனுமதி

டான் டோக் செங்கில் மீண்டும் உள்நோயாளிகளுக்கு அனுமதி

2 mins read
9b2d26e6-41e0-4484-bacb-05919edf200c
-

உள்சிகிச்சை பெறும் நோயா­ளி­களை நேற்று மீண்­டும் கட்­டம் கட்­ட­மாக ஏற்­றுக்­கொள்ள தொடங்­கிய டான் டோக் செங் மருத்­து­வ­மனை, அதன் பாது­காப்பை வலுப் படுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளது.

மருத்­து­வ­ம­னை­யின் 12,000 ஊழி­யர்­க­ளுக்­கும் அங்கு தற்­போது தங்கி சிகிச்சை பெற்று வரு­ப­வர் களுக்­கும் கடந்த இரு வாரங்­களில் ஆறு முறை கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. மருத்­து­வ­மனை தனது ஃபேஸ்­புக் பக்­கத்­தில் நேற்று அத­னைத் தெரி­வித்­தது.

சுமார் 2 வாரங்­க­ளுக்கு முன்­னர் கொவிட்-19 அங்கு பர­வத் தொடங்­கி­ய­தால், மருத்­து­வ­மனை புதிய உள்­சி­கிச்­சைக்­காக புதி­தாக வரு­ப­வர்­க­ளை­யும் வெளி­நோ­யாளி சிகிச்சை பெறு­ப­வர்­க­ளை­யும் அனு­ ம­திக்­கப் போவ­தில்லை என்று அறி­வித்­தது.

உள்­சி­கிச்சை பெற வரு­வோர் இனி அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று டான் டோக் செங் மருத்­து­வ­மனை கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது.

கடை­சி­யாக இரண்டு வாரங்­ க­ளுக்கு முன்­னர் அதன் வார்­டு­களில் கொவிட்-19 தொற்­றி­ய­தா­க­வும் அங்கு தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் அனை­வ­ரும் தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தில் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர் அல்­லது தனி­மை­யில் உள்­ள­தா­க­வும் மருத்­து­வ­மனை கூறி­யது.

பாது­காப்பு வலுப்­பெற்ற போதும் தனது முன்­னணி மருத்­து­வப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் நிதர்சனமான, உட­னடி ஆபத்­து­களை எதிர்நோக்கு வ­தா­க­வும் மருத்­து­வ­மனை அதன் ஃபேஸ்­புக் பதி­வில் கூறி­யது.

தீவி­ரப் பரி­சோ­த­னை­கள், கண்­கா­ணிப்பு ஆகி­ய­வற்றை மேற்­கொண்­டா­லும் ஆபத்­து­க­ளைக் குறைக்க மட்­டும் முடி­யுமே தவிர அகற்ற முடி­யாது என்­றது அது.

அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு, ஒரு நோயா­ளியை முன்­கூட்­டியே பதிந்­து­கொண்ட ஒரு வரு­கை­யா­ளர் நாளுக்கு ஒரு முறை சென்று பார்க்க முடி­யும். அதி­க­பட்­சம் அவர்­கள் அங்கு 30 நிமி­டம் இருக்­க­லாம்.

தீவிர சிகிச்சை பெற்று வரு­ப­வர்­களை வரு­கை­யா­ளர்­கள் பார்க்க அனு­மதி உண்டு. அத்­து­டன் அவ­சர சிகிச்­சைப் பிரி­வும் இனி இயங்­கும்.

மருத்­து­வ­மனை வளா­கத்­தில் நேற்று தாதி­கள் தனிப்­பட்ட பாது­காப்­புக் கவச ஆடை­களை அணிந்து காணப்­பட்­ட­னர்.

டான் டோக் செங் மருத்­துவ மனை­யு­டன் தொடர்­பு­டைய 46 பேருக்கு இது­வரை கொவிட்-19 தொற்று கண்­டுள்­ளது.