கத்தோலிக்க தொடக்கப்பள்ளி மாணவருக்கு தொற்று

கத்தோலிக்க தொடக்கப்பள்ளி மாணவருக்கு தொற்று

1 mins read
f18011ad-1bd9-4357-94f8-ad4b87fb55ae
-

கத்­தோ­லிக்­கப் பள்­ளி­யில் தொடக்­க­நிலை 2ல் பயி­லும் மாண­வ­ருக்கு கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

'லர்­னிங் பாய்ண்ட்' துணைப்­பாட நிலை­யத்­தில் படித்த அந்த மாண­வர் குறித்து நேற்று தனக்­குத் தெரி­ய­வந்­த­தாக பள்ளி பெற்­றோ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அக்­க­டி­தத்­தைப் பார்த்­தது.

அந்த மாண­வர் கடை­சி­யாக மே 13ஆம் தேதி பள்­ளி­யில் காணப்­பட்­ட­தா­க­வும் அப்­போது அவர் உடல்­ந­லத்­து­டன் இருந்­தார் என்­றும் அக்­க­டி­தம் குறிப்­பிட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மாண­வ­ரு­டன் அணுக்­க­மான தொடர்­பி­லி­ருந்து அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் விடுப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

மேல் விவ­ரங்­கள் இருந்­தால் பெற்­றோ­ருக்­குத் தெரி­விக்­கப்­படும் என்­றும் அக்­க­டி­தத்­தில் கூறப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் வரை­யில் இந்த துணைப்­பாட நிலைய குழு­மத்­து­டன் தொடர்­பு­டைய 20 தொற்­றுச் சம்­ப­வங்­கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் 12 பேர் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள்.